மலையப்பனுக்கு மண்சட்டியில் நிவேதனம்

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக, சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் கடைபிடிக்கிறார்கள்.

இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வர்.

மேலும் படிக்க... மலையப்பனுக்கு மண்சட்டியில் நிவேதனம்

பெருமான் பிறை சூடிய கதை

பிரம்ம தேவனின் புதல்வன் தட்சன். இவன், கயிலை மலைச் சாரலிலுள்ள மனசரோவம் எனும் நீர் நிலையின் கரையில் தபோவனத்தை அமைத்துக் கொண்டு சிவ பெருமானைக் குறித்து கடுந்தவமியற்றினான். அவனது தவத்திற்கு மனமகிழ்ந்த பெருமான், வரங்களைக் கோருமாறு கேட்க. அப்படி அவரிடம் தட்சன் கேட்டுப்  பெற்ற வரங்களுள் ஓன்று, உமையவளைத் தன் மகளாக அடைந்து, அவளை பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுப்பதன் மூலம் அவரைத் தன் மாப்பிள்ளையாக அடைய வேண்டும் என்பது.

மேலும் படிக்க... பெருமான் பிறை சூடிய கதை

சாமான்யனும் பக்தி செய்வது எப்படி?

[caption id="attachment_572" align="alignleft" width=""]sri krishnapremi swami[/caption]ஆற்றில் ஒரு பையன் குளித்துக் கொண்டிருக்கிறான். அம்மா கரையில் நின்று வேடிக்கை பார்க்கிறாள். அவன் மேலிருந்து கீழே குதித்து, நீந்தி, ஓடி விழுந்து

– இப்படியாக தண்ணீரிலே துவம்சம் செய்கிறான். அதைப் பார்த்துக் கொண்டிருக்கிற அம்மாவுக்குக் கவலை வந்து விடுகிறது. எங்கே பையன் சுழலில் சிக்கி விடுவானோ என்று!

அதற்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது அவனைத் தூக்கி கரையேற்ற முற்படுவாளா என்ன? ஏதாவது நீர்ச்சுழலில் சிக்குகிறான் என்று தோன்றும் போதல்லவா ஓடிச் சென்று கரையேற்ற முற்படுவாள்?

மேலும் படிக்க... சாமான்யனும் பக்தி செய்வது எப்படி?

சிறுகதை: நடையில் நின்றுயர் நாயகன்

சரயு நதிக்கரை ஓரத்திலே அவன் நடந்து கொண்டிருக்கிறான். அந்த நடை, எல்லையை நோக்கிப் பயணிக்கிற இறுதிநடை. யாரும் தன்னைச் சுமக்க வேண்டாது, தானே தன் சுமையைக் கொண்டுபோய்ச் சுமையைத் தந்தவனிடத்திலேயே ஒப்புவிக்கப் புறப்பட்டவனுடைய நடை அது. அவன் பின்வருங்காலத்தில் நடையில் நின்றுயர் நாயகன் என்று புகழப்படப் போகிறவனல்லவா? அந்த நாயகத்தன்மை சற்றும் குன்றிவிடாதிருக்கவே இப்போதும் அவன் நடந்து கொண்டிருக்கிறான்.

மேலும் படிக்க... சிறுகதை: நடையில் நின்றுயர் நாயகன்

பெற்றோருக்கு செய்யும் சேவை!

வேத சாத்திரங்களைக் கற்றறிந்த குண்டலர் என்பவருக்கு சுகர்மன் என்ற மகன் இருந்தான். சுகர்மன் பெற்றோர் மீது மிகுந்த பக்தி கொண்டவன். தந்தையிடமே வேதங்களைக் கற்றுக் கொண்டான்.

மேலும் படிக்க... பெற்றோருக்கு செய்யும் சேவை!

புஷ்பவாகனன் கதை

எத்தனையோ பல ஆண்டுகளுக்கு முன், புஷ்பவாகனன் என்று ஒரு மன்னன் இருந்தான். அறத்திலே மிக்க ஈடுபாடு கொண்டவன். குடி படைகளிடம் அன்பு மிகக் கொண்டவன். அவன் ஆட்சிக் காலத்திலே மக்களுக்கு எந்தப் பொருளிலும் பற்றாக் குறை ஏற்பட்டதில்லை.

மேலும் படிக்க... புஷ்பவாகனன் கதை
error: Content is protected !!