பெருமான் பிறை சூடிய கதை

கதைகள்!

அவ் வரத்தின் படியே உமா தேவியார் அவனது மகளாகத் தோன்ற திருவுள்ளம் கொண்டு, இமயமலைச் சாரலிலுள்ள காளிந்தி நதியில் ஒரு வலம்புரிச்சங்காக மாறி தவம் புரிந்து கொண்டிருந்தாள்.  மாசிப் புனலாட அங்கு வந்த தட்சன், அச் சங்கை எடுக்க. மறு கணம் அச் சங்கு அழகிய பெண் குழந்தையாக மாறியது. அக குழந்தையை  தன் அரண்மனைக்கு எடுத்து வந்த அவன் அதற்கு’தாட்சாயணி’என்று பெயர் சூட்டி
வளர்த்து வந்தான்.  உரிய வயதில் பெருமானுக்கு மணமும் செய்து வைத்தான்.

பின்னர் ஒரு சமயம் அவன் சிவபெருமானை மதியாது, பெரிய யாகத்தைத் தொடங்கினான்.  சிவபெருமானைத் தவிர பிரம்மன், திருமால், மற்றும் இந்திரன் முதலான ஏகாதச ருத்திரர்கள், அச்வினித் தேவர்கள், திக்குப் பாலகர் அனைவரும் கலந்து கொண்டனர்.  அதனால் வெகுண்ட பராசக்தியாகிய தாட்சாயணி, அவனிடம் சென்று பெருமானுக்குரிய சிறப்புகளைச் செய்யுமாறு கூற. . அவனோ ஆணவத்தால்  மதியிழந்து, தன் மகள் என்றும் பாராமல் அவளைப் பலவாறு இகழ்ந்தான்.

மனம் வருந்திய உமையவளான தாட்சாயணி, அவனிடம், ”என்னையும், என் கணவரையும் புறக்கணித்து விட்டுச் செய்யும் இந்த யாகம் ஒழியட்டும். நீ வளர்த்த இந்த உடலும் எனக்குத் தேவையில்லை” என்று கூறி அந்த யாகத் தீயில் குதித்து விடுகிறாள்.  பின் அவள் தன் உடலை விட்டு, இமயமலையில் பிள்ளை வரம் வேண்டி தவம் புரியும் இமவானிடம் குழந்தையாகி விடுகிறாள்.

இதனை அறிந்த பெருமான், வீரபத்திரர், பத்ரகாளி ஆகியோரை ஏவி அந்த யாகத்தை அழித்தார்.  கோபத்தால் ஜ்வலித்த அவர் தனியே வனங்களிலும், மலைகளிலும் சஞ்சரித்தார்.  தாங்கொணா கோபத்தாலும், தேவியைப் பிரிந்த தாபத்தாலும் அவரது உடலில் தோன்றிய வெப்பம் மேலும் அதிகரித்தது !

அந்த உக்கிரம் தாங்க முடியாமல் வனங்களும், சோலைகளும் வெந்து சாம்பலாகின !. செய்வதறியாது தேவர்களும், முனிவர்களும் கலங்கி நிற்க. பிரம்மனும், திருமாலும் அவரை உயர்ந்த பீடத்தில் அமர்த்தி அவரது கோபத்தையும், உடல் வெப்பத்தையும் குறைக்கும் வண்ணம் அவரைப் பலவாறுப் போற்றித் துதித்து, அமிர்த குடங்களால் நீராட்டினர். 

பின், சந்திரனை அவரது முடியின் மீது இருத்தி, அவனிடமிருந்து பெருகும் அமிர்தத்தாரைகளை அவர் மீது ஓயாதுப் பொழியச் செய்தனர்.  இதனால் பெருமானின் கோபம் சற்றுத் தணிந்தது.  உடலின் வெம்மையும் தணிந்தது.  பூசனையின் முடிவில் மனம் மகிழ்ந்த பெருமான், அனைவருக்கும் பல வரங்களை அருள. அப் பூசனையின் நினைவாக சந்திரனைத் தன் சடை மீதே இருக்கும்படி அருள் புரிந்தார் !.

அன்று முதல் சந்திரன் மூன்றாம் பிறை வடிவில் அவருடைய சடையில் தங்கி, ஓயாது அமுததாரைகளை பொழியலானான்.  இதனால் பெருமானுக்கும் ”சந்திரமௌளீஸ்வரர்,” ”சந்திரசூடன்”என்ற பெயர்களும் உண்டாயின.  .

 

– தங்கம் கிருஷ்ணமுர்த்தி, லண்டன்.

Leave a Reply