வேம்புலி அம்மனுக்கு தீ மிதி!

அம்பிகை ஆலயம்

சென்னைக்கு அருகே உள்ளது நங்கைநல்லூர். இங்கே 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேம்புலி அம்மன் ஆலயம் உள்ளது. ஆதி தேவதையாய், கேட்ட வரங்களைத் தந்தருளும் இந்த அம்மன் சுயம்புவாகும். இதைத் தவிர அன்னையின் சுதை சிற்பமும், உற்ஸவத் திருமேனியும் கருவறையில் உள்ளன. வலம்புரி விநாயகர், வள்ளி – தெய்வானையோடு காட்சி தரும் முருகன், காத்தவராயன்- ஆர்யமாலா, நாகர், சப்த கன்னியர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்து அன்னையின் ஆலயத்தை மேலும் அழகுறச் செய்கின்றன. ஆகம விதிமுறைகளின்படி பூஜைகள் நடக்கும் இந்தக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி பூஜை விசேஷமானது. பரம்பரை தர்மகர்த்தாக்களின் நிர்வாகத்தில் சிறப்பாக வழிபாட்டு முறைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. திருமணம் நடக்கவும், மழலைச் செல்வம் கிடைக்கவும் வேம்புலி அம்மனை பிரார்த்தனை செய்பவர்கள் ஏராளம்.

தற்போது, வேம்புலி அம்மன் ஆலயத்தில் 18ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா இன்று (29.7.2011)தொடங்குகிறது. கொடியேற்றம், காப்பு கட்டுதல், கரகம் வீதி உலா, கங்கை திரட்டல், அம்மன் வீதி உலா என்று சிறப்பான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 3 1ஆம் தேதி நடக்கும் தீ மிதித் திருவிழாவில் பக்தர்கள் பலர் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 7ல் மகளிர் பங்கேற்கும் 108 பால்குட அபிஷேக விழா நடைபெறும். ஆடியில் அம்மன் அருளைப் பெற இவ்வாலயத்தில் வழிபடுவோம்.

தகவல்: வெள்ளிமணி

Leave a Reply