கருணையின் வடிவாக விளங்கும் பண்ணாரி மாரியம்மன்!

அம்பிகை ஆலயம் ஆலய தரிசனம்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

27" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/pannari-mariyamman.jpg" alt="" width="764" height="764" />

தமிழகத்திலுள்ள அருளும் சிறப்பும் நிறைந்த அம்மன் தலங்களில் ஒன்று பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் ஆகும்

தமிழ் மக்கள் அன்னை வழிபாட்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் சகலத்தையும் பொருந்தியவள் அன்னை என்ற நம்பிக்கை பிரபஞ்சத்தில் இருக்கிறது அந்த தாயின் சக்தியால் கருணை மழை பொழிந்து மக்கள் நலமாக வாழ்கிறார்கள் என்று நம்புகின்றனர் அந்த தெய்வத்தை தன் தாயாகவே போற்றி அன்பு செலுத்துகிறார்கள்.

அம்மன் திருக்கோயில்கள் பல ஊர்களில் பல தோற்றங்களில் பல பெயர்களில் வழிபாடு செய்யப்படுகிறது அப்படிப்பட்ட ஒரு புகழ்மிக்க சக்தி வடிவாக விளங்கும் ஆலயம் பண்ணாரி மாரியம்மன் கோவில்

பெரியார் மாவட்டத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது கோவை ஈரோடு திருப்பூர் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களிலிருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது

வனப்பகுதியில் முட்புதர்கள் மத்தியில் ஆதி சக்தியாக விளங்குகிறாள். அன்னை முட்புதரில் லிங்கமேனியாக தோற்றம் அளித்ததாகவும் அங்கு அடிக்கடி ஒரு காராம்பசு வந்து தனது பாலை அந்த திருமேனிக்கு அபிஷேகம் செய்து விட்டு சென்றுகண்டிருந்தது .

கன்றுக்கு பால் இல்லாமல் வீட்டுக்கு பால் தராமல் அந்த பசு தினமும் இவ்வாறு செய்வதால் பசு எங்கு சென்று மேய்கிறது என பசுவின் உரிமையாளர் பசுவை தொடர்ந்து போக பசு காட்டுப் பகுதிக்குள் செல்வதைக் கண்டார்.

முட்புதரில் மறைந்திருந்து பார்த்த பொழுது அது தெய்வத்தின் திருமேனி மீது பாலை சொறிவதை கண்டு அதிசயித்து ஊரைக்கூட்டி அந்த இடத்தில் தோண்ட அங்கு லிங்கத் திருமேனியாக காட்சி தந்தது

எல்லோரும் மகிழ்ந்து பக்திப் பெருக்குடன் ஊர் பெரியவர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் பொழுது ஒருவருக்கு சாமி வந்தது.

தன்னை பண்ணாரி மாரியம்மன் என்று கொண்டாடி வழிபடுமாறு ஆணை பிறந்தது.

உடனே பச்சை இலைகளால் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு கூரைகள் அமைத்து திருவிழா நாட்களை கொண்டாடி வந்தனர்

அன்னை எல்லோருக்கும் அனுக்கிரகம் செய்து வந்தால் சில ஆண்டுகள் கழித்து கோயில் அமைக்கப்பட்டு கர்ப்பகிரகம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகியவை பக்தர்களால் கைங்கரியங்கள் செய்யப்பட்டு இறுதியாக கோபுரமும் கட்டினார்கள் என்று சகல சக்தியுடன் விளங்கும் பண்ணாரி அம்மன் கர்நாடக வியாபாரிக்கு கூட வழித் துணையாக இருந்து அருள்பாலித்து உள்ளாள்.

ஒரு சமயம் ஆங்கிலேய அதிகாரி தனது துப்பாக்கியில் குறிப்பாக வேண்டி அம்மன் கோவிலில் சுற்றில் குறி வைத்து சுட்டான் அதனால் அவன் கண்கள் ஒளிர்நதன பிறகு தனது குற்றம் உணர்ந்து அன்னை சன்னதியில் மன்னிப்பு கேட்டு அன்னை அருளால் தீர்த்தங்கள் வழங்கப்பட்டு அவனது கண் ஒளி பெற்றன

பெங்களூர் வியாபாரி சேட் என்பவன் அம்மன் கோவில் அருகில் தன் மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு ஏதோ தன் அலுவல்களை முடித்து விட்டு வந்து அங்கு உள்ளவர்களை பார்த்து இது என்ன கோயில் என்று கேட்க அவர்கள் இது மாரியம்மன் கோயில் என கூறினார்கள் அதற்கு அவன் அம்மன் கோவில் இங்கே அய்யன் கோவில் எங்கே என்று கேலியாக கேட்டான் பிறகு தன் மோட்டார் வண்டியை எடுத்தபோது வண்டி நகரவில்லை தான் அங்கு உள்ளவர்களை பார்த்து வண்டி நின்றது என்று கேட்க நீ செய்த கேள்வியினால் என்று அவர்கள் கூறினார்கள் தன் குற்றத்தை உணர்ந்து தேவியைப் பணிந்து வேண்டவே வண்டி நகர்ந்தது அம்மனின் கருணையை வியந்து புஷ்பம் தேங்காய் பழம் ஆகியவற்றை வைத்து படைத்து வழிபட்டான்

அன்னையை பயபக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு வேண்டியதை வேண்டிய வண்ணம் அருள்பாலிக்கிறாள்.

தினமும் பக்தகோடிகள் அபிஷேக ஆராதனை பொங்கலிடுதல் மற்றும் முதலியவற்றை செய்து வழிபாடுகள் நடத்தி தேவியின் தீர்த்தத்தால் சகல வியாதிகளும் குணமாகும் செய்தவர்களையும் அவர்களின் வேண்டுகோளின் மூலம் அவர்களை மன்னித்து அவரது கருணையால் சிறந்தவர்களாக குணம் உள்ளவர் களாக மாற்றி அன்பைப் பொழிகிறார் பண்ணாரி மாரியம்மன் மாரி என்றால் மழை என்று கூறுவர் நன்மை தீமைகள் என்று பார்க்காது அனைவருக்குமே தனது அன்புமழை பொழியும் கருணை மாரி பண்ணாரி மாரியம்மன்.

இத்தலத்தில் உள்ள குளம் சக்தி தீர்த்தம் தலவிருட்சம் வேங்கை மரம் இங்கு தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது சுவாமியின் பெயர் பண்ணாரி ஈஸ்வரர் அன்னையின் பெயர் பண்ணாரி மாரியம்மன் ஆடி,தை ,மாளய அமாவாசைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதால் பக்தகோடிகள் குவிந்த வண்ணம் இருப்பார்கள். ஞாயிற்றுக் கிழமை வெள்ளிக் கிழமை நாட்களில் வெளியூர்களில் இருந்து தனி பேருந்துகளில் அன்னையின் கோயிலுக்கு பக்தர்களை அழைத்து வருகிறார்கள். திருவிழா காலங்களில் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள்.

 

Leave a Reply