முதலில் நந்தி தேவரைத் தரிசனம் செய்து, அங்கிருந்து இடப் புறமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, பிறகு சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து வலமாகச் சென்று ”கோமுக்” எனப்படும் பெருமானின் அபிஷேக நீர் வரும் துவார வழியை தரிசித்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்தி தேவரை மீண்டும் தரிசித்து, பிறகு இடமாகச் சென்று சண்டீஸ்வரரை தரிசித்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்தி தேவரை தரிசனம் செய்ய முன் புறமாகச் சென்று கோமுக்கை தரிசிக்கவும்.
இந்த ”சோமசூக்த பிரதட்சிணத்துக்குப் பிறகு, தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள வேண்டும்! இந்த ”ஆத்மப் பிரதட்சிணமானது, ஆத்ம லிங்கத்துக்கே ”சோமசூக்தப் பிரதட்சிணம்” செய்வதற்கு ஒப்பாகும்!
ஆலகால விஷத்தால் தாக்குண்ட தேவர்கள், இடமும் வலமுமாக திசை புரியாது அஞ்சி ஓடிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த ”சோமசூக்த பிரதட்சிணத்தை” பிரதோஷ நாளில் செய்தால் அனந்த கோடி நன்மைகளும் கிட்டும்!
– தங்கம் கிருஷ்ணமூர்த்தி