இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை யானை மீது வைத்து கொடிபட்டம் வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து கோயிலின் நந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள திருக்கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கோட்டுராஜா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம்மாதம் 17-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு வகையான மேளங்கள்,களியல் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயில் ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.