682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

“அமிழ்தினும் இனிய யோகி”
(மீ. விசுவநாதன்)
ஊரினைச் சுற்றிச் சுற்றி
ஓர்பயன் கொண்டேன் இல்லேன்!
பேரினை வாங்க வேண்டிப்
பெரியதோர் உழைப்பு மில்லேன்!
நீரது இல்லாப் பனைபோல்
நெடிதென வளர்ந்த என்னுள்
பாரதீ தீர்த்தர் பார்வை
பதிந்திடப் பவித்ர மானேன்!
எழுபத் தைந்து என்னும்
இனியதோர் வயதைக் காணும்
பழுத்த யோகி யான
பாரதீ தீர்த்தர் பாதம்
தொழுத பேருக் கெல்லாம்
புலருமே அமைதி வாழ்க்கை!
எழுதும் எனக்கோ என்றும்
இவர்மொழி அமுத வாக்கே!
<
p class=”has-text-align-right”>(இன்று – 03.04.2025 – சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் 75ஆவது வர்த்தந்தி தினம் – பிறந்த தினம்)