மதுரை மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா; பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன்!

மதுரை, சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள மாயாண்டி கோவில் பங்குனி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டம் , சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி
ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாயாண்டி சுவாமி, முனியாண்டி சுவாமி, பகவதிஅம்மன், காளியம்மன், பட்டத்தரசிஅம்மன், சோனைசாமி கோயில் பங்குனி திருவிழா நடந்தது.

விழாவை முன்னிட்டு, இன்று காலை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சக்தி கரகத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றுஇரும்பாடி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் கரைத்தனர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பெண்கள் முளைப்பாரி உடன் ஊர்வலமாக சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தொடர்ந்து, வைகை ஆற்றில் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கிராமத்தினர் செய்திருந்தனர்.



Leave a Reply