

ஓம் ஓங்காரமே போற்றி
ஓம் அஷ்ட கணபதியே போற்றி
ஓம் மூலவரே கணேசா போற்றி
ஓம் மஞ்சளில் ஆன மங்கலமே போற்றி.
ஓம் சிவசக்தி மைந்தனே போற்றி
ஓம் கந்தனின் மூத்தோனே போற்றி
ஓம் முக்கடவளுக்கும் கடவுளே போற்றி
ஓம் சங்கடஹர சதுர்த்தியானே போற்றி.
ஓம் நவக்ரஹ தோஷத்தினை கரைபவனே போற்றி
போற்றி போற்றி என போற்றிடுவேன் நித்தம் நித்தம் என் மூச்சு உள்ளவரை ஓம் மூஷிக வாகனா போற்றி.
தமிழில் இருக்கக்கூடிய மந்திரம் தான் இது. முடிந்தால் சுலபமாக நீங்கள் இதை மனப்பாடம் செய்து கொள்ளலாம். முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதி வைத்து, அல்லது கைப்பேசியில் இருக்கும் இந்த மந்திரத்தை பார்த்தும் கூட ஒருமுறையேனும் விநாயகர் கோவிலில் உச்சரியுங்கள்.
உங்களால் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை என்றால் வீட்டிலேயே விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும். மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு, விநாயகரின் முன்பு அமைதியாக அமர்ந்து, உங்களுடைய கஷ்டங்களை விநாயகரிடம் சொல்லுங்கள். உங்களுடைய கஷ்டங்களுக்கான விமோசனம் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைத்துவிடும்.
தமிழ் மூதாட்டி ஔவை போற்றிய தமிழ்க் கடவுளுக்கு… தமிழ்ப் போற்றி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.