திருமாலின் பத்து சயன தலங்கள்
- ஜல சயனம் :
107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம்.

- தல சயனம்:
63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் மல்லையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான தல சயனம் . இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

- புஜங்க சயனம் (சேஷசயனம்):
முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்). இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

- உத்தியோக சயனம் :
12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்). வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார்.

- வீர சயனம் :
59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான வீர சயனம். திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் தான் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் வீரராகவப் பெருமாள் வீர சயனத்தில் காட்சி தருகிறார்.

- போக சயனம் :
40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான போக சயனம். இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.

- தர்ப்ப சயனம் :
105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம். இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார்.

- பத்ர சயனம் :
99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான பத்ர சயனம். இங்கு வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள் வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர என்பது ஆலமரத்து இலையை குறிக்கிறது.

- மாணிக்க சயனம்:
61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான மாணிக்க சயனம். இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தின் சிறப்பாக, இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

- உத்தான சயனம் :
திருக்குடந்தையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான உத்தான சயனம். இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.
பத்துவித சயனத்தில் பக்தர்களுக்கு அருளும் பரந்தாமன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.