வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.
ராமா யணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். அறிவு உடல் வலிமை துணிச்சல் புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமைய பெற்ற வர். சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர்.
ஆஞ்சநேயர் பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது. வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர்.
திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தி னான். குழந்தைச் செல்வம் வேண்டி சிவபெரு மானை நோக்கி தவம்புரிந்தான். அவன் முன் தோன்றிய ஈசன், ‘உனக்கொரு மகள் பிறப்பா ள். அவளுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லா தவனாக வாழ்வான்’ என்று கூறி மறைந்தார்.
அவ்வாறே குஞ்சரனுக்கு ஒரு மகள் பிறக்க, அஞ்சனை என்று பெயரிட்டு வளர்த்தனர். அவ ள் பருவம் எய்ததும், கேசரி என்னும் வானர வீரனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன்.
ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி, ‘பெண்ணே நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று மகாதேவனை குறித்து தவம் செய். அவர் அருளால் விண்ணவர் போற்றும் மகன் பிறப்பான்’ என்றது.
தேவதை கூறிய அந்த இடத்திற்கு சென்ற அஞ்சனை, காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தைக் கண்டு வாயு தேவன் அதிசயித்தார். ஒரு முறை வாயு பகவான் சிவசக்தி வடிவான கனி ஒன்று, அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.
அந்தக் கனியை உண்ட சில தினங்களில் அவள் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. ‘அஞ்சனா தேவி! சிவனுக்கும், சக்தி க்கும் ஏற்பட்ட சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி, வாயுதேவன் கனி உரு வில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படுவா ன். விண்ணும் மண்ணும் அவனைப் போற்றி புகழும்’ என்றது.
அரண்மனைக்குத் திரும்பிய அஞ்சனை, நடந் தது பற்றி கணவர் கேசரியிடம் கூறினாள். மாதங்கள் பல கடந்தன.
ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார்.
வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதி பலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தி யுடனும் தொண்டு செய்தார். ராமனுக்கு பணி விடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். சொல்லின் செல்வனான அனுமன் முதன் முதலாக ராமனைச் சந்தித்தபோது, ‘நீங்கள் யார்?’ என்று ராமன் கேட்டார்.
அதற்கு, ‘காற்றின் வேந்தருக்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன். நான் அனுமன் என்று, தன் தந்தையின் பெயர், தாயாரின் பெயர், தன் பெயர் அனைத்தையும் அடக்கமாக கூறினார் அனுமன்.
ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார்.
விரதம்இருப்பதுஎப்படி?
அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகு ம். இன்பம் பெருகும்.
அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலு க்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றி லை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபட வேண்டும்.
வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவே த்தியம் செய்வதனால் அனுமன் மகிழ்வார்.
அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தன ம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும்.
வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோ டு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொரு ட்களால் பூஜை செய்ய வேண்டும்.
கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போட லாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வா று செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.
காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்தி ரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங் கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.
ஆஞ்சநேயர்அருள்கிடைக்சொல்லவேண்டிய_மந்திரம்..
“ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்..”
தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.
ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஆஞ்சநேயா…நவமாருதி_ஸ்லோகங்கள்
நவமாருதியையும் ஒவ்வொரு கிழமைகளில், அவர்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால், எல்லா வளங்களும் பெறலாம்.
1 எதிரியின் தொல்லை நீங்க…
ஸ்ரீதீர மாருதி!
புத்திர்பலம் யசோ தைர்யம் நிப்பயத்வம் அரோகதா:
அஜாத்யம் வாக் படுத் வம்ச ஹனூமத் ஸ்மரணாத்பவேத்
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, செவ்வாய்க்கிழமையன்று ஸ்ரீதீர மாருதிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, செந்தூர அர்ச்சனை செய்து வணங்கினால், எதிரிகள் தொல்லைகள் யாவும் நீங்கும். வழக்கில் வெற்றி நிச்சயம்!
மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி..
குசலம் சாஹ சித்தராத் தோஹதச்த்ருர நிந்தம:
விபிஷேந ஸஹாயந ரமென ஹரிபி: சஹ
நிஹதோ ராவணே தேவி லஷ்மணஸ்ய நாயதச
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, திங்கட்கிழமையன்று ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும். சந்திர கிரகத்தின் அருள் கிடைக்கும். மன அமைதி, மனத் தூய்மை அடைவோம். குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கும்.
பாவம் போக்கும் ஸ்ரீபஜனை மாருதி..
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்:
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ சாந்தகம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபஜன மாருதியை புதன் கிழமையன்று வணங்கினால், பாபங்களும் தோஷங்களும் விலகும்.
தைரியம் தரும். ஸ்ரீவீர மாருதி..
ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபக் கணமாருதம்!
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, வியாழக்கிழமையன்று ஸ்ரீவீர மாருதியைத் தரிசித்து எலுமிச்சை மாலை அணிவித்தால், கல்வியும் செல்வமும் கிடைக்கும். எதிலும் தைரியம் பிறக்கும். கை விட்டுப்போன பொருள் நம்மை வந்து அடையும்.
தம்பதி ஒற்றுமைக்கு.. ஸ்ரீதியான மாருதி..
ப்ரிய மாக்யதே தேவீ த்வாம்துபூப: ஸபாசநேய
திஷ்ட யா சீவஸி தர்மஞ்நே ஜயமெப்ரதி க்ருஹ்யதாம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீதியான மாருதியை வெள்ளிக்கிழமைகளில் வணங்கினால், தம்பதி வேற்றுமை நீங்கும். மனத்துள் அமைதி நிலவும்.
சனியிடம் இருந்து காக்கும் ஸ்ரீபக்த மாருதி..
உல்லங்கிய ஹிந்த்தோ:ஸலிலம் ஸலீலம்
யஸ்ஸோக வஹ்ணிம் ஜனகாத்மஜாயா
ஆதாயதே நைவ ததாஹ லங்காம்
நமாமி ப்ராஜ்ஜலிம் ஆஞ்சநேயம்.
சனிக்கிழமைகளில் இங்கு வந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபக்த மாருதிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, வன்னி இலையால் பூஜித்து வணங்கினால், சனி பகவானின் தொல்லையில் இருந்து காத்தருள்வார், ஸ்ரீபக்த மாருதி.
ராகு தோஷம் நீக்கும் ஸ்ரீபால மாருதி..
ஸர்வ கல்யாண தாதாரம் குமாரம் ப்ரும் ஹசாரினம்
துஷ்ட க்ரஹ விநாசய ஹனுமந்தம் உபாஸ்மஹே!
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தின்போது இங்கு வந்து வணங்கி வழிபட்டால், தேக ஆரோக்கியம் கூடும். ராகு மற்றும் கிரக தோஷங்கள் விலகும்.
லாபம் தரும் ஸ்ரீபவ்ய மாருதி..
அஸாத்ய ஸாதக ஸ்வாமி அஸாத்யம் தவகிம்வத
ஸ்ரீராமதூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் சாதகப்ரபோ!
என்ற ஸ்லோகத்தை எல்லா தினங்களிலும் சொல்லி, ஸ்ரீபவ்ய மாருதிக்கு சிவப்பு நிற புஷ்பங்களைச் சார்த்தி மனதார வழிபட, தொழிலில் வெற்றி உண்டாகும்.
நோய் நீக்கும் ஸ்ரீசஞ்ஜீவி மாருதி..
மனோஜவம் மாருத துல்யவேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸாம் நமாமி
என்ற ஸ்லோகத்தை, பிரதோஷ வேளையில் சொல்லி, ஸ்ரீசஞ்ஜீவி மாருதியைத் தரிசித்து, கருநீல புஷ்பம் சார்த்தி, வடைமாலை சார்த்தி வணங்கினால், சகல நோய்களும் நீங்கும் ,என்பது பக்தர்கள் மத்தியில் ஐதீகமாக உள்ளது.