எல்லோருக்கும் தாம் ஏதாவது ஒரு மந்திரத்தை – ஜபத்தைச் செய்துகொண்டு வந்தால் நல்லது என்ற ஆசை ஏற்படுகிறது.
இம்மாதிரி நல்ல உபதேசம் கொடுப்பவர்கள் குறைவு. உபதேசம் கொடுப்பதற்குச் சிலபேர் கிடைத்தாலும் விதிக்கு அனுஸாரமாகக் கொடுப்பதில்லை.
இம்மாதிரி நிலையில் நாம் என்ன செய்வது என்ற சந்தேகம் நமக்கு வரும். இதற்காக மந்திரம் ஒன்று இருக்கிறது. அது எப்பேற்பட்ட மந்திரம்? எப்படி வேண்டுமோ அப்படி இந்த மந்திரத்தைச் சொல்லலாம். ஒருவன் புனிதமானவனானாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும், ஆசாரசீலனாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் அந்த மந்திரத்தைச் சொல்லலாம் என்று சொல்லியிருக்கிறது. அது என்ன மந்திரம்?
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே || ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே “
என்ற மந்திரமேயாகும். இந்த நாமாக்களை எல்லோரும் சொல்லலாம். இதற்கு நியமமே கிடையாது. எப்போதும் தாராளமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்,
அவ்வாறு ஜபிப்பவனுக்கு பகவான் அனுக்ரஹம் செய்வான். அப்படிச் சொல்லிக் கொண்டு வந்தால் நாம் பகவானின் அருள்பெற்று புனிதமடைந்து ஜன்ம சாபல்யமடையலாம்
எல்லோரும் கூற.. இந்த மந்திரம்: ஆச்சார்யாள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.