’தோணி’ போன்ற வருசம் இது…

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

60 ஆண்டிற்கு முன்பே தீர்க்க தரிசனமான ஆசீர்வதம் அளித்திருக்கிறார்கள் நம் ஜகத்குரு….

60 வருடங்களுக்கு முந்திய இதே பிலவ வருடத்தில், நம்முடைய ஜேஷ்ட மஹா சன்னிதானம், ஜகத்குரு ஸ்ரீ அபினவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகளின் தமிழ் புத்தாண்டு ஆசீர்வாதம்….

இன்று புத்தாண்டின் புனித தினம்.. ” பிலவ வருஷம் ” தொடங்கும் நாள்… மக்கள் யாவரும் மகிழ்ந்து , வருஷம் முழுவதும் மங்களம் நிலவ , வழிகாட்டும் நன்னாளாக கருதப்படும் திருநாள்…

” பிலவ ” என்றால் படகு என்று பொருள்… ” வாழ்க்கைக் கடலை கடந்து , ஜன்ம ஸாபல்யத்தைப் பெறுவதற்கு , உற்ற ஸாதனமாக அமையவல்ல சிறந்ததொரு தோணி போன்ற வருஷம்.. “

” எத்தனை பிரவாஹம் வந்தாலும் , எவ்வளவு கொந்தளிப்புக்கள் ஏற்பட்டாலும் , ஆடாது அசையாது சுலபமாக எடுத்துச்செல்லும் ” பிலவத்தில் ” ( படகில்) நாம் எல்லோரும் ஏறி ,

” காமம் , குரோதம் ” என்னும் அலைகளை சரிவர சமாளித்து கஷ்டமின்றி வாழ்க்கை நடத்திட , ஸதா பகவத் ஆராதனை செய்து , பெறுவதற்கரிய நித்யானந்தம் அடைந்து பிறந்ததின் பயனை பெறுவோமாக….

நம் சீரிய பாரதநாட்டின் , தொன்று தொட்டு நிலவி வரும் பண்புப்படி , இன்று உற்றார் உறவினர் கூடி களிப்புற்று வாழ்ந்து , பரஸ்பர சகோதரத்துவத்தின் மாண்பை எடுத்துக்காட்டுவது வழக்கம்…

இந்தக்கூடி வாழும் சூழ்நிலை உலகெங்கும் பரவி , ஸகல ஜீவராசிகளும் சுபிக்ஷத்துடன் வாழ ” ஸ்ரீ சாரதா சந்திரமெளலீஸ்வராளின் அனுக்ரஹத்தை கோருகிறேன்” …

அதிகாலை எழுந்து ஆண்டவனை தெரிசித்து , நல் உணவு சமைத்து , பகவானுக்களித்து , பின் உறவினர் நண்பர்களுடன் கூடி உண்டு மகிழ்வுற்றிருங்கள்… உங்கள் சந்தோஷத்திற்கு காரணமாயுள்ள பகவானை சிறிது நேரமாவது வணங்கி துதியுங்கள்…
குறைவற்ற நிறைவாழ்வு கிட்டி மங்களம் பெறுங்கள்…

  • மீ.விசுவநாதன்

Leave a Reply