ஸ்ரீ தசமஹாவித்யா ப்ரார்த்தனை

ஆன்மிக கட்டுரைகள்

kanaka-durga
kanaka-durga

ஸ்ரீ தசமஹாவித்யா ப்ரார்த்தனை

dasamaha vidhya
dasamaha vidhya

காலத்தின் வடிவமான ஸ்ரீ காளி நம்மை அறியாமை இருளிலிருந்து காப்பாற்றட்டும்

இந்தப் பிறவியிலேயே ஸ்ரீ வித்யா ஞானம் பெற்று வாழ்வு பயனுடையதாக ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரி அருள் செய்யட்டும்

ஆணவம், கர்மம், மாயை அழிந்து ஞானம் பெற ஸ்ரீ திரிபுர பைரவி அருள் செய்யட்டும்

வாழ்வின் துன்பம் எல்லாம் ஸ்ரீ தூமாவதி அருளால் மறையட்டும்

பிறவிப்பெருங்கடலை எளிதில் கடந்திட ஸ்ரீ தாராம்பிகை அருள் செய்யட்டும்

சகல செல்வங்களும் ஸ்ரீ புவனேச்வரி அருளால் கிடைக்கட்டும்

ஐம்புலன்களும் மனமும் அடங்கிட சஷ்டி தேவியாகிய ஸ்ரீ சின்னமஸ்தா அருள் புரியட்டும்

ஞான ஒளியாகிய அறிவொளி திக்கெட்டும் பரவிட ஸ்ரீ ராஜ மாதங்கி அருள் செய்யட்டும்

எதிரிகளின் சூழ்ச்சியை ஸ்தம்பிக்கச் செய்து ஸ்ரீ பகளாமுகி தர்மம் வெல்ல ரக்ஷிக்கட்டும்

வாழ்வில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்து, வறுமை, கடன் அற்ற, செல்வச் செழிப்பினை வழங்கி, எல்லோரும் எல்லாமும் பெற்று சமத்துவத்தோடும், சாந்தி சமாதானத்தோடும் உலகமே அமைதிப்பூங்காவாக திகழ்ந்திட ஸ்ரீ கமலதாரிணி அருள் பூரணமாக நிறையட்டும்.

இந்த பத்து பிரார்த்தனைகளையும் அகில உலகிற்கும் அன்னையான ஸ்ரீ புவனேச்வரி தேவி நிறைவேற்றி அருள் செய்யட்டும் !

இன்பமே சூழ்க ! எல்லோரும் வாழ்க !

(புதுக்கோட்டை ஸ்ரீ ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகள் அதிஷ்டானம் வெளியீடான ப்ரார்த்தனை-நூலில் இருந்து)

  • V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஸ்ரீ தசமஹாவித்யா ப்ரார்த்தனை முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply