சபரிமலையில் மகரஜோதி வெள்ளிக்கிழமை (ஜனவரி – 14) நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.3 0 மணிக்கு சுவாமி ஐயப்பன் பொன்னம்பலமேட்டில் ஜோதியாக காட்சி தருவார். இதைக் கண்டுகளிக்க பல லட்சம் பக்தர்கள் இப்போதே சபரிமலையில் குவிந்துள்ளனர்.
இது குறித்து வேணுகோபால் எஸ்.பி. கூறியது:
மகரஜோதியை முன்னிட்டு சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,500 போலீஸôர், மத்திய காமண்டோபடை வீரர்கள், தமிழ்நாடு போலீஸôர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர போலீஸ் பாதுகாப்புப் படையும் தயார் நிலையில் உள்ளது.
இப்போது 18-ம் படியில் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. 18-ம் படியில் 1 நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறி செல்வார்கள். பக்தர்கள் நெரிசல் மிகுந்த இடங்களைக் கண்டறிந்து அங்கு கூடுதல் போலீஸôர் நிறுத்தப்படுவார்கள்.
மகரஜோதியை முன்னிட்டு தேவசம்போர்டில் வேலை பார்க்கும் ஊழியராக இருந்தாலும் சரி அடையாள அட்டை இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள். எனவே அனைவரும் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
அதேபோல் ஜோதி முடிந்து பக்தர்கள் பாதுகாப்பாகச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார் வேணுகோபால்.