ஜீவனின் இலட்சியம்..! ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

bharathi theerthar
bharathi theerthar
bharathi theerthar

பகவத்பாதர்,
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் I
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் II
“பகவானுடைய நாமத்தைச் சொல். பகவானுடைய முகாரவிந்தத்தினால் உண்டான கீதையைப் படி. பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை, திவ்யமங்கள ரூபத்தை மனதில் நினைத்துக்கொள். இதுதான் உன்னுடைய ஜென்மத்தை ஸார்த்தகப்படுத்திக் கொள்வதற்கும் நீ விரும்பக்கூடிய சுகத்தை அடைவதற்கும் உரிய வழி.

இதை விட்டால் வேறு வழி இல்லை. லெளகிகம் இருக்கவே இருக்கிறது. அதில் என்ன நடக்கிறதோ நடக்கிறது. ஆனால், அதுதான் என்னுடைய ஜீவன இலட்சியம் என்று நினைக்காதே. இந்த லெளகிக விஷயங்கள் உன்னுடைய ஜீவனத்துக்கு இலட்சியமில்லை. ஜீவன இலட்சியம் என்பது பரமாத்மாவினுடைய ஸாயுஜ்யத்தை அடைவது. அதற்கு முயற்சி செய்” என்று சொன்னார்.

ஆகையால், எல்லோருக்கும் சுகம் வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று சொன்னால் பகவானுடைய ஸ்மரணம், பகவானுடைய சிந்தனம், பகவானுடைய ஸேவை ஆகியவைதான் மார்க்கம், எல்லோரும் அந்த மார்க்கத்தை ஆஸ்ரயித்து தங்களுடைய ஜென்மத்தை தன்யமாக்கிக் கொள்ளவேண்டும்.

ஜீவனின் இலட்சியம்..! ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply