682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உலகளவில் மிகவும் பிரபலமான கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் நடப்பாண்டு மண்டல – மகர விளக்கு பூஜை காலத்தில் இணைய வழியில் பதிவு செய்யும் பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள்.
பம்பை நிலக்கல்லில் உடனடி புக்கிங் ஸ்பாட் புக்கிங் வசதி முற்றிலும் நிறுத்தம் செய்யப் பட்டது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் அடுத்த மாதம் நவம்பர் 16இல் தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சபரிமலையில் நடப்பாண்டு பூஜை காலத்தில் இணையவழி பதிவு மூலம் மட்டுமே பக்தா்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பக்தா்களின் அதிக கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும். இணையவழி முன்பதிவின்போது, யாத்திரை பாதையை தோ்வு செய்யும் வாய்ப்பும் அளிக்கப்படும். நடப்பாண்டு நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதல் வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சபரிமலை மற்றும் வாகன நிறுத்தமிட சாலைகளின் பராமரிப்புப் பணி விரைவில் நிறைவடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன், தலைமைச் செயலா் சாரதா முரளீதரன், மாநில காவல்துறை தலைவா் ஷேக் தா்வேஷ் சாஹேப் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.