ஒரு மனிதன் உயிரை காப்பாற்றுவது மிகவும் புண்ணியமானது. அதேபோல் மனிதன் உயிரை எடுப்பது மிகவும் பாவம். இந்த சத்தியத்தை புரிந்து கொள்ளாமல் பலபேர் ஹிம்சிப்பதை பார்க்கும்போது மனதிற்கு வருத்தம் வருகிறது.
எவ்வளவு படித்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் அப்படிப்பட்ட மனிதன் கீழ்த்தரமானவன். நமது கலாச்சாரத்தில் யாருக்கும் ஹிம்சை செய்யக்கூடாது என்பது முதல் உபதேசமாக கூறப்படுகிறது.
துஷ்யந்த மகாராஜா ஒரு ஆசிரமத்தில் மானை ஸ்வீகரிக்கப் போன சமயத்தில் அந்த ஆசிரமத்தில் இருக்கும் மாணவர்கள் அவரை தடுப்பார்கள். ஒரு சின்ன மான் குட்டியை கூட ஸ்வீகரிக்க கூடாது என்று சொல்லும் பொழுது ஒரு மனிதன் பிராணனை எடுப்பது என்ன நியாயம்?
ஒருவனுக்கு வேறு உதவி செய்யாவிட்டாலும் அவனுக்கு ஹிம்சை செய்யாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய உசிதமாக இருக்கும்.
இதை நீதி சாஸ்திரங்களில் ப்ராணாதா தன்னிவ்ருத்தி என்று சொன்னார்கள் இந்த ஒரு பாவம் செய்வதற்கு கோபம்தான் காரணமாகிறது.
அதனால் கோபம் மனிதனுக்கு மிகப் பெரிய சத்துரு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த கோபத்தை ஜெயித்தால் இம்மாதிரியான தவறுகள் உண்டாகாது. ஆகையால் மனிதன் கோபத்தை தவிர்த்து அதனால் உண்டாகக்கூடிய பாவங்களைச் செய்யாமல் எல்லோருடனும் அன்பாக நடந்தால் வாழ்க்கை பவித்திரம் ஆகிவிடும்.
எல்லோருக்கும் இப்படிப்பட்ட பவித்திரமான வாழ்க்கை அமையட்டும் என்று ஆசிர்வாதம் செய்கிறோம்