பகைமை மறந்து ஒன்று பட வேண்டிய சமயம்! ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

.jpg" style="display: block; margin: 1em auto">

bharathi theerthar
bharathi theerthar

மகாசன்னிதானம் அவர்கள் கூறிய கேள்வி-பதில்

பக்தர் ஒருவர் ஆச்சார்யாளிடம் சில கேள்விகளை கேட்க அனுமதி கேட்டு, கேட்கிறார்.

தங்களின் இளம்பிராயத்தில் உங்களுடைய லட்சிய நாயகர்களாக எந்த இதிகாச நாயகர்களை கருதினீர்கள் என்று அவர்களிடம் கேட்கிறார்

ஆச்சாரியாள் அதற்கு ராமாயணத்தில் பகவான் ஸ்ரீ ராமரும் மஹாபாரதத்தில் தருமரும் என்று கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை ஆச்சாரியாள் எனக்கு கூறுவீர்களா என்று அந்த பக்தர் வினவ ஆச்சாரியாள் அதற்கு தர்மத்தை கடைபிடிப்பதில் இருவருக்கும் இருந்த தீவிரம் என்னை கவர்ந்தது.

ராமயணத்தில் ராமன் தர்மமே வடிவானவன் என்ற வாக்கியம் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது என்று கூறுகிறார்கள். மகாபாரதத்தில் ஆச்சாரியாள் மிகவும் கவர்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறுமாறு அந்த பக்தர் கேட்க ஆச்சாரியாள் கூறுகிறார்கள்.

துரியோதனின் தவறினால் கோபமுற்ற கந்தர்வர்கள் அவனைச் சிறை பிடித்து கொன்றுவிட முடிவு செய்கின்றனர் இதைக் கேள்விப்பட்ட பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் ஆகியோர் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் தர்மரின் மனோநிலை என்ன தெரியுமா? போய் துரியோதனை காப்பாற்றுங்கள் என்று தன் சகோதரருக்கு கட்டளையிடுகிறார். அவருடைய மனோபாவத்தை பார்த்தீர்களா கூறும்போது மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்‌.

இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்த துரியோதனன் இறக்கவிட்டு இருந்திருக்கலாம். அவனை காப்பாற்ற வேண்டும் என்று அவருக்கு எந்தவித அவசியமும் இல்லை மேலும் துரியோதனன் இறப்பு பாண்டவர்களுக்கு மிகவும் அனுகூலமான ஒன்றாக இருந்திருக்கும். ஆயினும் எது தர்மமோ அதை செய்ய வேண்டும் என்று தான் தர்மர் நினைத்தார்.

அவரைப் பொறுத்த மட்டில் துரியோதனனுடைய பகைமை என்பது குடும்ப பிரச்சனை. ஆனால் இப்பொழுதோ கந்தர்வர்களால் பிடிக்கப்பட்டு பிறருடைய உதவியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்‌ துரியோதனனின் சகோதரர்களான பாண்டவர்கள் அவனுக்கு உதவி செய்வதுதான் தர்மம். மாறாக அவனை காப்பாற்றாமல் இறக்கவிட்டால் சகோதரர்களுக்கான கடமையிலிருந்து தவறியவராய் ஆகிவிடுவோம் என்று தர்மன் சகோதரனுக்கு எடுத்துரைக்கிறார். அதன்பிறகு அவருடைய கட்டளையின் பேரில் சகோதரர்கள் நால்வரும் சென்று துரியோதனனை மீட்டு அவனை தர்மரிடம் அழைத்து வருகிறார்கள்.

தர்மரும் உரிய மரியாதைகளுடன் நடத்தி அனுப்பி வைக்கிறார் இத்தகைய தருணத்தில் கூட தங்களின் பல்வேறு இன்னல்களுக்கும் அவன் தான் காரணம் என்பதை அவர் ஒரு சிறிதும் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. இந்த சம்பவத்தை படித்த போது இது போல் வாழ வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன் என்கிறார் ஆச்சாரியாள்.

நம்முடைய வாழ்க்கையில் இந்த மாதிரியான லட்சியங்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தால் மனம் தூய்மையாகி ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் நமக்கு கிட்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

பகைமை மறந்து ஒன்று பட வேண்டிய சமயம்! ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply