682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை நேற்று இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்றதுபூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் எண்ணெய் திரி தாம்பூல.பை மற்றும்பட்டு துணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
பின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது திருவிளக்கு பூஜையில் மதுரை ஜே பி குழுவினரின் ஆன்மீக நிகழ்ச்சி சொற்பொழிவு நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது அடுத்த வாரம் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா, கலைவாணி பள்ளி தாளாளரும் தொழிலதிபருமான டாக்டர் மருதுபாண்டியன், பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மற்றும் பூமேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்