மக்களில் பல விசித்திரமான பிறவிகள் காணப்படுகின்றனர் சிலர் கிடைக்க முடியாத வஸ்துகளை விரும்புகின்றனர் சிலர் தொலைந்து போனதை பற்றி வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள் அவ்விரண்டு பேரும் அவிவேகிகள் தான்
ஏனென்றால் கிடைக்க முடியாத வஸ்துவை எவ்வளவு விரும்பினாலும் அது கிடைப்பதில்லை என்பது தீர்மானம் அப்படி இருக்கும் பொழுது அதை விரும்புவதில் என்ன பிரயோஜனம் சந்திரனின் வெளிச்சம் நமக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது அதற்காக சந்திர பிம்பத்தை வீட்டு வாசலில் கொண்டு வைத்துக் கொள்ளலாமா அது நடக்குமா ஆகையால் அந்த மாதிரியான விருப்பம் அவிவேகம் என்று கூறப்படுகிறது
அதேபோல தொலைந்து போனதை பற்றி யோசிப்பதும் வீண்தான் சிலர் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள் இருந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் வேறு சிலர் தங்களுக்குப் பிடித்த பொருள்கள் நஷ்டமான பொழுது மிகவும் வருந்துவார்கள் இறந்தவர் திரும்பி வருவதும் இல்லை நஷ்டமடைந்த பொருள் கிடைக்க போவதுமில்லை அந்த ஸ்திதியில் அதைப்பற்றி வருத்தப்படுவது அவிவேகம் தான் சிலர்
கஷ்டங்கள் வந்தபோது விவேகத்தை இழந்துவிட்டு பகவானையும் சாஸ்திரங்களையும் நிந்திப்பார்கள் நாம் பண்ணிய கர்ம பலனை நாம் அனுபவிக்க வேண்டுமே தவிர வேறொருவரை நிந்தனை செய்து பிரயோஜனம் இல்லை அதுவும் அவிவேகம் தான்
இந்த மாதிரியான அவிவேகத்திற்கு இடம் கொடுக்காமல் எல்லோரும் விவேகிகள் ஆகவேண்டும்
எது விவேகமான செயல்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.