682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சோழவந்தானில் சித்திரை திருவிழா கோலாகலம்; எம் வி எம் குடும்பத்தினர் சார்பில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு!
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கள்ளழகரை வரவேற்றனர்
முன்னதாக சோழவந்தான் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளழகரை வரவேற்று மண்டகப்படி நடைபெற்றது அதனை தொடர்ந்து சோழவந்தான் எம் வி எம் குடும்பத்தினர் சார்பில் மருது மகாலில் கள்ளழகரை வரவேற்று சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து திருக்கோவில் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து சனீஸ்வரன் கோவிலில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்றது கோவில் அர்ச்சகர் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அதனை அடுத்து மருது பெட்ரோல் பங்கில் கள்ளழகரை வரவேற்ற பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி முத்தையா சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் வள்ளி மயில் தொழிலதிபர் எம் வி எம் பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் ஆகியோர் கள்ளழகரை வரவேற்றனர்
அங்கும் கோவில் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து பச்சை பட்டு உடன் தங்க குதிரை வாகனத்தில் முதல் முறையாக சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்கினார்
பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி கள்ளழகரை வரவேற்றனர் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்