e0af8d-e0ae85e0aeb0.jpg" style="display: block; margin: 1em auto">


வாழ்க்கையைப் பவித்ரமாக்கிக்கொள்ள கடவுளிடம் ச்ரத்தை, பக்தி, கடவுள் வழிபாடு, ஸத்கர்மாக்கள், ஸத்ஸங்கம் போன்ற பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மனிதன் தனது அன்றாட வேலைகளுடன் இவற்றையும் இணைத்துக் கொண்டால் அவனது வாழ்க்கையில் ஆனந்தமும் அமைதியும் உண்டாகும். ஆனால். இதற்கெல்லாம் சத்ருவாக அமைவது அஹங்காரந்தான். அதை அவன் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கி கார்யங்களைச் செய்து வந்தால் அவனுக்கும் மற்றோருக்கும் அது நன்மை உண்டாக்கும்.
நான் இந்தக் கார்யத்தைச் செய்தேன். வேறு யாரால் இதைச் செய்ய முடியும்? எனக்கு நிகராக யாரும் கிடையாது’ என்றெண்ணிக் கார்யங்களைச் செய்தால் அந்தக் கார்யங்களுக்கான பலன்களையும் அவனேதான் அனுபவிக்க வேண்டிவரும்.
ஆகையால் அஹங்காரத்தை மனிதனின் சத்ரு என்றும் கழுத்தில் மாட்டிக்கொண்ட முள் என்றும் கூறுவார்கள்.
तस्मादहंकारमिमं स्वशत्रु भोक्तुर्गले कण्टकवत्प्रतीतम्।
विच्छिद्य विज्ञानमहासिना स्फुटं भुंश्वात्मसाम्राज्यसुखं यथेष्टम्।।
தஸ்மாதஹங்காரமிமம் ஸ்வசத்ரும் போக்துர்கலே கண்டகவத்ப்ரதீதம்
விச்சித்ய விஜ்ஞானமஹாஸினா ஸ்புடம் புங்க்ஷ்வாத்மஸாம்ராஜ்யஸுகம்
யதேஷ்டம்.
‘அஹங்காரத்தை ஞானம் என்ற கத்தியால் அறுத்து அளவற்ற ஆத்ம ஸாம்ராஜ்ய ஸுகத்தை அனுபவி’ என்று ஞானிகள் உபதேசித்தார்கள்.
இதை நன்றாகப் புரிந்துகொண்டு அஹங்காரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்துவதே ஒரு பெரிய சாதனையாகும்.
சுகம் பெற.. ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.