e0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0.jpg" style="display: block; margin: 1em auto">
மனிதனுக்கு எல்லாமே எப்பொழுதுமே நூறு சதவீதம் சரியாக இருந்துவிடாது. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த உயர்வு தாழ்வு தாரதம்யத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் பிறருடைய குறையை கூறுவதையே ஸ்வாரஸ்யமாக நினைத்து காலத்தை வீணாக்குகிறார்கள். இது சிலருடைய ஸ்வபாவமாகவே ஆகிவட்டது.
சிலர் பிறருடைய ரூபமோ, அங்கமோ நன்றாக இல்லையென்றால் பரிஹாசம் செய்து கொண்டு இருப்பார்கள். சிலர் வயதானவர்களை மதிக்கவே மட்டார்கள். வயதானவர்களின் மனம் பஞ்சுபோல இருக்கும். அதை நோகடிக்கக்கூடாது. ஒருவனுக்கு படிப்பு வரவில்லை என்றால் சிலர் அவனை கணக்குக்கே சேர்க்கமாட்டார்கள். இன்னும் சிலர் பணவசதி இல்லாதவனை துச்சமாக மதித்து ஒதுக்கிவிடுவார்கள். இது எல்லாம் ஒரு நல்ல குணமே ஆகாது. பாபம் தான் சம்பவிக்கும்.
பிறரில் எப்பொழுதும் குறையைக் கண்டு சந்தோஷம் அடைபவன், தன் உள்ளில் கொஞ்சம் பார்த்துகொள்ள வேண்டும். தான் குறையில்லாதவனா என்று தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். தான் எவ்வளவு தூரம் ஒழுங்கு என்று கவனிப்பவன் பிறரின் குறையைக் கண்டு பரிகாசம் செய்யமாட்டான். ‘உலகம் பலவிதம்’, ‘யார் யாரை என்ன குறை கூறுவது’ என்கின்ற எண்ணம் வந்துவிடும். அப்படி யாரையும் பரிகாசம் செய்யாமல், எல்லாருடனும் அன்போடு நடக்கிறவன் தான் உத்தம புருஷன். அப்படிப்பட்டவனிடம் எல்லாரும் அன்பாக இருப்பார்கள். இதை நன்றாக புரிந்து கொண்டு, நல்ல விதத்தில் வாழக்கையை அமைத்து கொள்ள எல்லாரையும் ஆசீர்வதிக்கிறோம்.
हीनाङ्गानतिरिक्ताङ्गान्विद्याहीनान्वयोधिकान् ।
रूपद्रव्यविहीनांश्च जातिहीनांश्च नाक्षिपेत् ॥
ஹீனாங்கானதிரிக்தாங்கான் வித்யாஹீனான் வயோதிகான் ரூபத்ரவ்யவிஹீனாம்ஸ்ச ஜாதிஹீனாம்ஸ்ச நாக்ஷிபேத்
குறை கூறாதீர்கள்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.