முயற்சியால் கிட்டும் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

Bharathi-thirthar
Bharathi-thirthar
Bharathi-thirthar

ஞானம் பெற்று மோக்ஷம் அடைவதாலேயே மனிதன் பரமச்ரேயஸ்ஸை அடைவான். ஆர்வமுள்ளவர்கள் அதை அடைவதற்கு முயற்சி செய்கிறார்கள். ‘ஞானந்தான் மோக்ஷத்திற்கு காரணமாக இருக்கிறதென்றால் சாஸ்த்ரத்தில் கூறியுள்ள கர்மாக்கள் எதற்காக? நேரடியாகவே ஞானம் வந்துவிடாதா?’ என்ற ஸந்தேஹம் சிலருக்குத் தோன்றுகிறது.

அதற்கு பதில் என்னவென்றால் எல்லோருக்கும் உடனடியாக ஞானம் வந்துவிடாது. அனேக ஜன்மாவிலுள்ள கர்மவாஸனைகள் அதற்குத் தடையாக இருக்கும். சித்தசுத்தி அடையாவிட்டால் ஞானம் பெறமுடியாது. சாஸ்த்ரத்தில் கூறியுள்ள கர்மாக்களை ஈச்வரார்ப்பண புத்தியுடன் செய்துவந்தால்தான் சித்தசுத்தி உண்டாகும். ஆகையால் கர்மவிதி கூறும் சாஸ்த்ரம், பிரமாணம் இதற்கு அவசியம். இதைத்தான் ஸ்ரீ சங்கரபகவத்பாதார் தன்னுடைய பாஷ்யத்தில்,

न च एवं कर्मविधिश्रुतेः अप्रामाण्यं, पूर्वपूर्वप्रवृत्तिनिरोधेन उत्तरोत्तरापूर्वप्रवृत्तिजननस्य प्रत्यगात्माभिमुख्येन
प्रवृत्युपादनार्थत्वात् ।

ந ச ஏவம் கர்மவிதிச்ருதே: அப்ராமாண்யம் பூர்வபூர்வப்ரவ்ருத்தி நிரோதேன

உத்தரோத்தராபூர்வப்ரவ்ருத்திஜனனஸ்ய ப்ரத்சகாத்மாபிமுக்யேன

ப்ரந்ருச்யுபாதனார்தத்வாத். என்று கூறினார்.

முந்தைய பழக்கங்களைத் தடுத்து புதிய பயிற்சிகள் மூலம் மனதை சுத்திசெய்து அந்தராத்மாவை நெருங்க உதவி செய்யும் கர்மவிதிகள், ஞானம் வராதவனுக்குத்தான். ஞானம் வந்தவனுக்கு இல்லை. ஞானமடைய முயற்சிசெய்பவனுக்கு பலன் ஸத்யமாக இருக்கிறது. ஆனால் ஞானம் வந்தவனுக்கு இதெல்லாம் மித்யாவாகத் தோன்றும்.

मिथ्यात्वेऽपि उपायस्य उपेयसत्यतया सत्यत्वं एव स्यात् ……

மித்யாத்வே(அ)பி உபாயஸ்ய உபேயஸத்யதயா ஸத்யத்வம் ஏவ ஸ்யாத்…..

ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவும் பகவத்கீதையில்,

कर्मण्यैव हि संसिद्धिमास्थिता जनकादयः ।
लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमर्हसि ।।

கர்மண்யைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய்:
லோகஸங்க்ரஹமேவாபி ஸபச்யன் கர்துமர்ஹஸி . என்று கூறினார்.

ஜனகரைப்போன்ற ஞானிகள்கூட லோகக்ஷேமத்திற்காக கர்மாக்களைச் செய்து வந்தனர் என்று அர்த்தம். ஆகையால் ஞானமடைவதற்கு சித்தசுத்தி முக்கியமாக இருப்பதால் கர்மாக்களை ஈச்வரார்ப்பணமாக செய்துவந்து சித்தசுத்தியடைய எல்லோரையும் ஆசீர்வதிக்கிறோம். என்று மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார்கள்.

முயற்சியால் கிட்டும் பலன்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply