682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
— சேகர வாத்யார், நெல்லை —
சங்கரன்கோயில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் சங்கரலிங்க ஸ்வாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயண ஸ்வாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜைக்கான வஸ்துக்களை கிருஷ்ண பட்டர் வழங்கினார் என்பது செய்தி.
சங்கரன்கோவிலுக்கும் சிருங்கேரி சங்கராசார்ய ஸ்ரீமடத்துக்கும் பல விதத்தில் சம்பந்தம் உண்டு. ஸ்ரீ ந்ருஸிம்ஹபாரதீ ஸ்வாமி காலத்தில் இங்கே விஜயம் செய்து ஸ்ரீசங்கரநாராயண ஸ்வாமி ஸந்நிதியில் ஸ்ரீ சந்த்ரமெளலீஷ்வரரை வழங்கி தினமும் பூஜை செய்ய வைத்தார்கள்.
ஸ்ரீசச்சிதானந்தசிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் இந்த ஆலயத்தில் பூகைலாசே எனத் தொடங்கும் ஆதிசங்கரபகவத் பாதாளின் ஸ்ரீ கோமதி அம்பாள் அஷ்டகம் பாடி பூஜை செய்துள்ளார்கள்.
இப்படியாக இந்த ஆலயத்திற்கு சிருங்கேரி ஆசார்யாளுடைய விஜயம் எப்போதும் இருக்கும். இப்பவும் ஸ்ரீ மடத்து பண்டிதர்களை கும்பாபிஷேத்திற்கு அனுப்பி ஸ்வாமி அம்பாளுக்கு உண்டான மரியாதைகளை செய்துள்ளார்கள்!
அந்த கோமதி அம்பாளுக்கு உரிய அஷ்டகத்தை நாமும் படித்து அம்பாளை வணங்குவோமே!
நமோ நம:ஶங்கர கோமதீப்யாம்!
பூ கைலாசே மனோக்ஞே புவனவன வ்ருதே நாகதீர்த்தோப கண்டே
ரத்ன ப்ரஹாரா மத்யே ரவிசதுர்ச மஹா யோகபீடே நிஷண்னம்
ஸம்சாரா வியாதி வைத்யம் ஸகல ஜனனுதும் சங்க பத்மார்ச்சி தாங்க்ரிம்
ஸ்ரீ கோமதிஅம்பா சமேதம் ஹரிஹர வபுஷம் ஸ்ரீ சங்கரேசம் நமாமி
<
p class=”has-text-align-center”>ஸ்ரீ கோமதீ அஷ்டகம்
லக்ஷ்மிவாணி நிஷேவிதா புஜபதாம் லாவண்ய ஷோபாம்சிவாம்
லக்ஷ்மிவல்லப பத்மஸம்பவநுதாம் லம்போதர உல்லாஸினீம்
நித்யம் கௌசிகவந்தய மானசரணாம் ஹ்ரீங்காரா மந்த்ரோஜ்வாலாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (1)
தேவீம் தானவராஜ தர்பஹரிணீம் தேவேந்த்ர சம்பத்பரதாம்
கந்தர்வவோரக யக்ஷசேவித பதாம் ஸ்ரீ சைலமத்தியஸ் ஸ்திதாம்
ஜாதிசம்பக மல்லிகாதி குஸுமை சம்சோபிதாங்கிரி த்வஜாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (2)
உத்யத் கோடி விகர்ததனத்யுதி நிபாம் ஒளர்வீம் பவாம்போநிதே
உத்யத் தாரகநாதிதுல்ய வதனாம்உத்யோதயந்தீம் ஜகத்
ஹஸ்தந்யஸ்த சுகப்பிரணாள ஸஹிதாம் ஹர்ஷப்பிரதாம் அம்பிகாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (3)
கல்யாணீம் கமிநீய மூர்த்தி ஸகிதாம் கற்பூர தீபோஜ்வலாம் கர்ணாந்தாயத லோசனாம் களரவாம் காமேஸ்வரி சங்கரிம்
கஸ்தூரீ திலகோஜ்வலாம் ஸகருணாம் கைவல்ய் சௌக்யப்ரதாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (4)
வைடூர்யாதி சமஸ்தரத்னகசிதே கல்யாண ஸிம்ஹாஸனே
ஸ்தித்வா சேஷஜனஸ்ய பாலனகரீம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரிம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் பயஹராம் பண்டஸ்.ய யுத்தோத்ஸுகாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (5)
சைலாதீச ஸுதாம் ஸரோஜநயனாம் ஸர்வாக வித்வம்ஸினீம்
சன்மார்க்க ஸ்தித லோகரக்ஷ ஜனனிம் சர்வேச்வரீம் சாம்பவீம்
நித்யம் நாரததும்புரு பரப்ரூதிபி வீணா வினோதஸ்திதாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (6)
பாபாராண்ய தவானலாம் பிரபஜதாம் பாக்யபிரதாம் பக்திதாம்
பக்தாபத் குலசைல பேதனபவிம் ப்ரத்யக்ஷமூர்த்திம் பராம் மார்க்கண்டேய பராசராதி முனிபி ஸமஸ்தூயமானாமுமாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (7)
சோராரண்யநிவாஸினாம் பிரதிதினம் ஸ்தோத்ரேண பூர்ணாநநாம் த்வத்பாதாம்புஜஸக்த பூர்ணமனஸாம் ஸ்தோகேதரேஷ்ட பிரதாம்
நாநா வாத்ய விபவை சோபிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (8)
(இந்த கோமதி அஷ்டகத்தை ஆதி சங்கரர் இயற்றியதாகவும் ஒரு குறிப்பு உண்டு)