தெய்வத்தமிழ் குழு
48" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/10/temple-wall.jpg" alt="" width="1000" height="500" />வியப்பூட்டும் 8 உண்மைகள்.!
ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.
வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை நமக்கு அளிக்கிறது.இவ்விரண்டு அணுக்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களில் சுவர்களில் பூசப்பட்டிருகின்றது .
ஆண்களின் விந்து வெள்ளை நிறமுடையது, பெண்களின் கருப்பை சிகப்பு நிறத்தில் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்து தான் இங்கே உயிர் உண்டாகிறது. இதனையும் கோவில் சுவர் குறிப்பால் உணர்த்துகிறது.
மனதில்,உடலில் உயிர் உண்டாவதை போல இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும். அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள்.
சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை சான்றாக வைத்து நமக்கு வாழ்வியலையும் கூடவே சேர்த்து உணர்த்துகின்றன.
இது மட்டுமல்ல கோவில் வாசல்படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னாலும், அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. கோவில் வாசல்படியை குனிந்து தொடும் பொழுது நமக்கு
நமக்குள் ஒரு பணிவை ஏற்படுத்துகிறது. பிறகு உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.படிக்கட்டை தொட்ட பிறகு, நம் நெற்றியில் விரல்களை வைத்து அழுத்த வேண்டும். அப்போது நம்மிடம் மறைந்துள்ள தீய சக்திகள் விலகி தெய்வ சந்நிதியில் இருந்து சில அதிர்வலைகளை நம்மிடம் உண்டாக்கும்.
இப்படியான பல வியப்புகள் கோவிலில் இருப்பதனால் தான், பலரும் தங்களை அறியாமலேயே ஆன்மீகத்தில் மூழ்கி விடுகின்றனர். நம்மை புது மனிதனாக்கி புத்துணர்ச்சியோடு கோவிலுக்குள் செல்ல வைக்கும் அறிவியல் சூட்சமங்கள் இவை