ரவிச்சந்திரன், மதுரை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.
மதுரையில் உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சிறப்பு வாய்ந்த இந்த கோவில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம் போன்றவை சிறப்பு பெற்றவை,
இந்தாண்டு நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கி வருகிற 25 ஆம் தேதி வரை நடக்கிறது, தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தான் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்,
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் மற்றும் சுவாமி சன்னதி மற்றும் கொலுசாவடி முழுவதும் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட உள்ளது, இது தவிர அனைத்து கோபுரங்கள் மற்றும் பொற்றாமரைக்குளம் பகுதியிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன,
நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்தல் அலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்,
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, நவராத்திரியின் முக்கிய விழாவான மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரம் 24 ஆம் தேதி நடைபெறுகிறது,
ஆண்டுதோறும் கொலு மண்டபத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி நடைபெறும், இந்தாண்டு கொரைனா பரவல் காரணமாக கொலு நடைபெற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை