தத்வமஸி என்பதன் விளக்கம் என்ன?!

ஆன்மிக கட்டுரைகள் கேள்வி-பதில்கள்

கயிலைக்கண்ணன் வெங்கட்ராமன்

சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நுழைவுவாசலில் “தத்வமஸி” என மலையாளத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும். இதற்கு “நீயே அதுவாக இருக்கிறாய்” என பொருள்.

அது என்பது ஐயப்பனைக் குறிக்கும்.
“நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன் உடலைக் கொண்டு பல பாவங்கள் செய்கிறாய். என்னை நினைத்து விரதம் இருக்கும் போது மட்டும் உன் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறாய். உன்னை எல்லாரும் சுவாமி என்கிறார்கள். ஏன̷் 0;ஐயப்பா என்று என் பெயரையே உனக்கு சூட்டி அழைக்கிறார்கள். அப்போது நீ நானாகவே ஆகிறாய். தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாய். இங்கிருந்து நீ திரும்பிய பிறகும், இந்த விரதங்களை மனதால் கடைபிடி. நானாகவே நீ மாறி விடுவாய்” என்று ஐயப்ப சாமி தன் பக்தர்களுக்குச் சொல்வது போல அமைந்துள்ளது இந்த வாக்கியம்.

சுவாமி சரணம்

Leave a Reply