ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரை ஈஸ்வர ஸாக்ஷாத்காரத்தை முக்தி என்றும் கூறலாம். முக்தி என்றால் “விடுதலை” என்று அர்த்தம். எதிலிருந்து விடுதலை? பந்தங்களிலிருந்து விடுதலை. “பந்தம்” என்று இங்கு எதைக் குறிப்பிடுகிறோம்? பிறப்பு –இறப்பு விஷயங்களே பந்தம் என அழைக்கப்படுகின்றன.
இப்போது இந்த வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. இதற்கு முன்பு எத்தனையோ பிறவிகள் கிடைத்தாயிற்று. இன்னும் எத்தனையோ பிறவிகள் வர இருக்கின்றன.
இங்கு ஒரு கேள்வி எழலாம். “பிறவிகள் ஏற்பட்டால் என்ன? இதனால் என்ன பெரிய பிரச்சினை வந்துவிடப் போகிறது?” என்று சிலர் நினைக்கலாம். மீண்டும் மீண்டும் பிறப்பு-இறப்புச் சக்கரத்தில் உழல்வதால் மனிதன் சந்தோஷத்தை இழந்துவிடுகிறான். இதுதான் பிரச்சினை.