பாக்ய பிரசன்னா

நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயிலில் காலபைரவாஷ்டமி வழிபாடு நடந்தது
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் பைரவாஷ்டமி விழா நடந்தது

திருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர் கோவில் உள்ளது
இக்கோவில் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் பாடிய காவிரி தென்கரை தலங்களில் 36வது தலமாடும்தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்கள் இது 99வது தலமாகும் திரும. ண தடை நீக்கக் கூடிய தலமாகவும் இக்கோவில் சூரியன் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன
இக்கோவிலில் ஆண்டுதோறும் பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம் அதன்படி நடந்த விழாவில் அரசின் உத்தரவுப்படி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் அரசின் உத்தரவுப்படி விதிமுறைப்படி சமூக இடைவெளியோடு பைரவாஷ்டமி விழா நடந்தது

விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஒப்பிலாமுலையம்மை விநாயகர் முருகன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை செய்து மாலை நேரத்தில் உரிய வேத மந்திரங்கள் சொல்ல பைரவாஷ்டமி விழா நடந்தது
இதில் குருமகாசன்னிதானம் கலந்துகொண்டு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது