தெய்வ சொத்தையும், பிராமணன் சொத்தையும் அபகரித்தவன் நிலை என்னவாகும்?

கேள்வி-பதில்கள்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

19 aligncenter" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/krishnan.jpg" alt="" width="688" height="390" />

பகவானுக்கு தானம் கொடுத்த இருவர் யார் ?

பகவானுக்கு தானம் கொடுத்த இருவர்:

மஹாபலி.
கர்ணன்.

2கர்மயோகம்,
பக்தியோகம்,
ஞானயோகம்்
உதாரணம் யார் ?

கர்மயோகம்
ஜனகர்.

பக்தியோகம்
அம்பரீஷன்.

ஞானயோகம்
ஜடபரதர்.

.”அதிதி” என்பவர் யார் ?

எந்த திதியில், எப்பொழுது வருவார் என்பது தெரியாமல் திடீரென்று வருபவரே “அதிதி” எனப்படுவார்.

ஶ்ரீமத் பகவத்கீதாவில் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் வாக்கில் கூறப்பட்ட ஒரு பக்தனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் எத்தனை ?

ஒரு பக்தனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் 36.

ஆதாரம் :
ஶ்ரீமத் பகவத்கீதா,
(12—13 to 20.)

.”கர்மா”, “கர்மயோகம்” என்ன வித்யாஸம் ?

ஒரு காரியத்தை பலனை எதிர்பார்த்து செய்தால் அது “கர்மா”.
அது பந்தத்தை ஏற்படுத்தும்.

பலனை எதிர்பார்க்காமல், பகவானுக்கு அர்ப்பணமாகச் செய்தால் அது “கர்மயோகம்” ஆகும்.

பிந்து முகூர்த்தத்தில் திருடு போனது நிச்சயம் திரும்பக் கிடைக்கும்
இதைச் சொன்னவர் யார் ?

பிந்து முகூர்தத்தில்தான் ராவணன் சீதாவை அபகரித்துச் சென்றான்.

அதனால் சீதா திரும்பக் கிடைப்பாள் என்று ஶ்ரீராமரிடம் சொன்னவர் ஜடாயு.

ஆதாரம் :
ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம்.

எந்த முகூர்த்தத்தில் ஆரம்பிக்கும் காரியம் வெற்றி அடையும் ?

அபிஜித்” முகூர்த்தத்தில் ஆரம்பிக்கும் காரியம் வெற்றி அடையும்” என்கிறது சாஸ்திரம்.

பகவான் ஶ்ரீராமர் அபிஜித் முகூர்த்தத்திலேயே வானர சேனையுடன் லங்கையை நோக்கி புறப்பட்டார்.

பகவான் மஹாவிஷ்ணு, வாமனாவதாரம் எடுத்தது அபிஜித் முகூர்த்தத்தில்தான்.

தேவரிஷி நாரதரின் முந்தைய பிறவிகள் என்னென்ன ?

தேவரிஷி நாரதரின் முந்தைய பிறவிகள்

முதல் பிறவி, “உபஹர்ணண்” என்னும் கந்தர்வன்.

இரண்டாவது, ஒரு வேலைக்காரியின் மகன்.

மூன்றாவது, தேவரிஷி நாரதர்.

ஆதாரம் :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்,
(7–15–69 to 74.)

உத்தவருக்கு பகவான் ஶ்ரீகிருஷ்ணர் செய்த “நித்யகர்மா” உபதேசம் என்ன ?

பகவான் ஶ்ரீகிருஷ்ணர் உத்தவரிடம் ஒருவன் அவசியம் நித்யகர்மா எனப்படும் “சந்தியாவந்தனம்” செய்ய வேண்டும் என்கிறார்.

ஆதாரம் :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்,
(11–27–11.)

“தெய்வம், பிராமணன்” இவர்களுடைய சொத்துக்களை அபகரிப்பவன் நிலை என்ன ஆகும் ?

பகவான் ஶ்ரீகிருஷ்ணர் வாக்கு :

தன்னாலோ அல்லது பிறராலோ, தெய்வத்திற்கு அல்லது பிராமணனுக்கு அளிக்கப்பட்ட சொத்துக்களைக் கவர்ந்து கொள்பவன், லக்ஷோபலக்ஷம் ஆண்டுகள் மலத்தைத் தின்னும் புழுவாக-
பன்றியாக-
பிறந்து தவிப்பான்.

ஆதாரம் :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்,
(11–27–54.)

Leave a Reply