“ராமேசுவரம் கோயிலை மேம்படுத்த வேண்டும்’

செய்திகள்

ராமேசுவரம் கோயிலில் 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி, தரிசனம் செய்தால், பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.

அதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் கோயிலுக்கு வருகின்றனர்.

ஆனால், கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், இலவச தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கூடச் செய்து கொடுக்காமல், கோயில் உண்டியல் வருமானத்தை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

இக் கோயிலில் சுகாதாரம் முறையாகப் பேணப்படுவதில்லை. பொதுவாக பாதுகாப்புக்காக தனியார் நிறுவன காவலர்கள் தொழிற்சாலைகள், முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் நியமிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், ராமேசுவரம் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தனியார் நிறுவன காவலர்களை நியமித்துள்ளனர். சில சமயம் பக்தர்களை காவலர்கள் தாக்கி வரும் சம்பவமும் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது.

எனவே, புனிதமான இக் கோயில் தொழிற்சாலையாக மாறி வருவதைத் தடுத்து, பக்தர்கள் தரிசனம் செய்யும் கூடமாக மாற்றிட கோயிலுக்கு கூடுதலாக நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply