நிறைவு நாளான வியாழக்கிழமை பகலில் ஐயப்பனுக்கு சந்தன அபிஷேகம் நடத்தி உச்சி காலப் பூஜை, வழிபாடு நடைபெற்றது. இரவு தந்திரி கண்டரரு ராஜீவரு படி பூஜை நடத்தி ஹரிவராஸனம் பாடி, வைகாசி மாதப் பூஜைகளை நிறைவு செய்தார். இத்துடன் கோயில் நடை அடைக்கப்பட்டது. இனி வைகாசி பிரதிஷ்டை தின விழாவுக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்
