வைகாசி மாத பூஜைகளுக்காக வழக்கம்போல் இன்று மாலை, சபரிமலை நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் ஆலய நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி சுவாமி சந்நிதியின் நடையைத் திறந்து விளக்கு ஏற்றி வைக்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் கிடையாது! இரவு, 7:3 0க்கு நடை அடைக்கப்படுகிறது.
பின்னர் நாளை காலை 5 மணிக்கு மீண்டும் சுவாமி சந்நிதி நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை முதலியவை நடத்தப்பட்டு முற்பகல் 10 மணிக்கு சந்நிதி நடை சாத்தப்படும்.
பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். இரவு 7:30க்கு நடை அடைக்கப்படும். வழக்கம் போல் மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு, முதல் ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெறுவது போல் பூஜைகள் நடைபெறும். வரும் மே 19 இரவு 7:30க்கு வைகாசி மாத பூஜைகள் நிறைவு பெற்று, சுவாமி சந்நிதி நடை அடைக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக இந்த மாதமும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. இந்த பூஜைகளிலும் பக்தர்கள் எவருக்கும் அனுமதியில்லை. இருப்பினும், பக்தர்கள் www.onlinetdb.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொண்டு ஆன்லைன் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.