சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் வைகாசி தேர்த்திருவிழா தொடக்கம்

செய்திகள்

வரும் வழியில் மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் சுவாமிகள் தங்கியிருந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இரவு 7 மணிக்கு மலையில் இருந்து சுவாமிகள் நகருக்கு எழுந்தருளினர்.

மலையடிவாரத்துக்கு வந்த சுவாமிகளை கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வரவேற்றனர்.

பின்னர் சுவாமி தேர் வீதிகள் வழியாக மண்டபத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து முதல் நாள் அன்னபட்சி வாகனத்தில் சுவாமி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

நையாண்டி மேளம் ரத்து: சுவாமி நகருக்குள் எழுந்தருளும் போது வாணவெடிகள் வெடிப்பது வழக்கம். சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டியும், பாதுகாப்பு கருதியும் போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் வாணவெடிகள் வெடிக்கவில்லை. அதேபோல், சுவாமி வீதியுலாவின் போது, நையாண்டி மேள நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டன.

Leave a Reply