682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழாவில், பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நீரேத் தான் மந்தை திடலில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னரால் வழிபாடு செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் காலை 7.00 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூபமும் 9.00 மணி முதல் 12.30 மணி வரை சுவாமிக்கு திருமஞ்சனம் பெரியாழ்வார் திருமொழி கச்சை கட்டி எதிராசர் காக்கூர் கண்ணன் கோஷ்டியினரின் சேவா காலமும் மாலை 4.00 மணிக்கு சகஸ்ர நாம பூஜை சுவாமி வீதி உலாவும் நடந்தது.
5.00 மணி முதல் 6.00 மணி வரை கண்ணா சிலம்பாட்ட பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும், 6 மணி முதல் 7.00 மணி வரை கண்ணனின் சந்நிதியில் என்ற தலைப்பில் முனைவர் நல்லசிவம் பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார்.
7.00 மணி முதல் 8.00 மணி வரை ராமச்சந்திரா கலை பண்பாட்டு மையம் சார்பாக முத்துமலா கோபி குமாரின் நாட்டிய நாடகமும் நடந்தது.
இரண்டாம் நாள் காலை 7.00 மணிக்கு ஆச்சாரியார் வரவேற்பு 9.15 மணி முதல் 12. 50 மணி வரை கோபூஜை, அஸ்வ பூஜை, சந்தான கோபாலகிருஷ்ணா மூல மந்திர யாகம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கிருஷ்ணர் சரிதை புலவர் அழகர்சாமி ஆன்மீக சொற்பொழிவும் 5 மணி முதல் 6 மணி வரை கிருஷ்ணர் தொட்டில் வைபவமும்,திவ்ய பிரபந்த தாலாட்டு பாட்டு பாடப்பட்டது.
6.00 மணி முதல் 7.00 மணி வரை கலா சாதனா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 7.00மணி முதல் 8.00மணி வரை சப்த நிருத்யாலயா பள்ளி மாணவிகள் பாரம்பரிய பரதநாட்டியம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதன் ஏற்பாடுகளை, பரம்பரை டிரஸ்டி அர்ச்சகர்கள் பாகவ தோத்தமார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.