புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sabarimala nata thirappu

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் தேதி) மாலை திறக்கப்பட்டது. புதன்கிழமை முதல் சுவாமி ஐயப்பனுக்கு புரட்டாசி மாத பூஜைகள் துவங்கி வருமா 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
பம்பையில் 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து வைத்தார். வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இரவு பத்து மணிக்கு ஹரிவராசன பூஜை நடத்தி இரவு நடை அடைக்கப்பட்டது.

17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதிஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளும், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும்.

வரும் 20ம் தேதி பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் முதல் மாநாடு இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


Leave a Reply