ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா ஏப் 11இல் நடைபெறுவதை யொட்டி இன்று கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக துவங்கியது.

இவ்விழாவையொட்டி பந்தல் உள் அலங்காரப்பணி தீவிரமாக நடந்து முடிந்த நிலையில் விழாவுக்கான கொடியேற்றம் இன்று வேத பாராயண முறைப்படி நடைபெற்றது. திருக்கல்யாணம் ஏப்.11ம் தேதியும் நடக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இதன்படி, இந்தாண்டு திருக்கல்யாண வைபவம் வரும் ஏப்.11ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஏப்.3ம் தேதி இன்று கொடியேற்றம் நடைபெற்றது இதையொட்டி ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

கோயில் முன்புறம் உள்ள ஆடிப்பூரக் கொட்டகையில் பந்தல் உள் அலங்காரப் பணி தீவிரமாக நடந்து முடிந்தது வருகிறது.கோயில் திருக்கல்யாண ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பங்குனி மாதம் 20ம் தேதி (03.04.2025) இன்று துவஜாரோஹணம் (கொடியேற்றம்) நடந்த நிலையில் முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னார் கங்கு திருமஞ்சனம் நடைபெற்றது.இன்று முதல் சித்திரை மாதம் 02ம் தேதி (15.04.2025) புஷ்பயாகம் வரை நடைபெறும் விழாவில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து செல்வர்.

திருக்கல்யாண சேவையான 11.04.2025 வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு செப்புத்தேரோட்டம் (கோரதம்) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் 02ம் தேதி (15.04.2025) புஷ்பயாகம் நடைபெறும்.



Leave a Reply