682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம்:
உசிலம்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயககனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு கோவில் புனரமைப்பு செய்து ஆண்டிச்சாமி க்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் செய்தனர். அதனைத் தொடர்ந்து , மதுரை யதிராஜன் தலைமையில் சிவாச்சாரியர்கள் கோவில் கருவறையில் உள்ள ஆண்டிச்சாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
பின்பு, பால்,சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆண்டிச்சாமி சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கருப்பட்டி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐய்யனார் ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் காலயாக பூஜை தொடங்கியது தொடர்ந்து அய்யனார் கருப்பண்ண சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் பொம்மன் பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் ஆகிய சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கருப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்
மதுரை கோயில்களில் சோமவார பிரதோஷம்:
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர், மதுரை அண்ணாநகர், வரசித்தி விநாயகர், மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன், ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர், மதுரை ஆவின் பால விநாயகர், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல நாதர் கோயில்களில் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.
மதுரை விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும், பிரளயநாதர் சிவன் ஆலயத்தில், நரசிம்மர், சனீஸ்வர லிங்கம், நந்திகேஷ்வரர், சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, செய்யப்பட்டது. இதில், தொழிலதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர் எம். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோயில் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.