இன்றும் நம் வீட்டிற்கு யார் வந்தாலும் தண்ணீர் அருந்த கொடுப்பது நம்
முன்னோர்கள் வழக்கம் .
புதிதாக வருபவர் தெரிந்தவராக
இருந்தாலும், தெரியாதவராக இருந்தாலும் குடிக்க தண்ணீர் கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது மற்றும் அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பது
போன்ற நடைமுறை இருந்து வருகிறது .
இவ்வாறு வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பதற்கு மிகச் சிறந்த காரணங்கள் உள்ளது.
தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும்
அற்புதமான சக்தி இருக்கிறது. ஒரு மனிதனின் கோப தாபத்தையும், வெறுப்புணர்ச்சியையும் மாற்றும்
ஆற்றல் தண்ணீருக்கு உள்ளது.
ஏதாவது சண்டை சச்சரவு வரும்போது ஒருவரையொருவர் ஏச்சுப்பேச்சு நடத்தும் போது அவர்களை விலக்க வருபவர்
“முதல்ல தண்ணி குடிப்பா அப்புறம் பேசலாம்” என்று கூறுவார்.
சண்டையிடும் நபர் தண்ணீர் குடித்ததும்
தனது பேச்சில் ஒரு வித சாந்தம் வெளிப்படும்.
ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை 7.8 இல் நான் தண்ணீரின் சுவையாக இருக்கிறேன் என கூறுகிறார், இது தான் நாம் இன்றும் கடை பிடிக்கிறோம்
ரஸோ ‘ஹம் அப்ஸு கவுந்தேய
பிரபாஸ்மி சாஷி-சூர்யயோঃ
பிரணவ் சர்வ-வேடிசு
சப்த கே பௌருஷஸ் நৃஷு
ஓ குந்தியின் மகனே [அர்ஜுனா], நான் தண்ணீரின் சுவையாக இருக்கிறேன் , சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி, வேத மந்திரங்களில் ஓம் என்ற எழுத்து; நான் ஈதரில் ஒலி மற்றும் மனிதனில் திறனாக இருக்கிறேன்
விரதம் கடைபிடிப்பவர்கள் வெறுமனே தண்ணீரைக் குடித்து, பகவத் கீதை 7.8 இல் தண்ணீர் அருந்தும் வழக்கம் குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை நினைவில் வைத்து எளிய தியானப் பயிற்சி செய்தால், ” எளிதில் அவன் திருவடி அடையலாம்