682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சபரிமலை ஐயப்பன் கோவில் ஸ்ரீ சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டு இன்று நாள் முழுவதும் பூஜைகள் நடைபெறுகின்றன.
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இன்று இரவு 10 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மண்டல பூஜை வழிபாட்டிற்காக நவ 15ல் நடை திறக்கப்பட உள்ளது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான பாலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுவதால், நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று பூஜைகள் எதுவும் நடைபெறாத நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
காலை 10 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெற்றது இன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக வந்திருந்தனர்.
மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்