682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
முடுவார்பட்டி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன் கோவில் 48ஆம் நாள் மண்டல பூஜை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ காளியம்மன் திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு யாகபூஜைகளை தொடர்ந்து யாகசாலையில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் கருவறையில் அமைந்துள்ள காளியம்மன் மீது புனித நீர் ஊற்றப்பட்டு 48வது நாள் மண்டல பூஜையும் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.