மதுரை: வளர்பிறை பஞ்சமி; அறிவுத் திருக்கோயில் திறப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

madurai muthurmariamman temple

வளர்பிறை பஞ்சமி : சிறப்பு பூஜை

மதுரை அண்ணா நகர் யானை குழாய் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மன் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.

இத்திருக்கோயிலில், அமைந்துள்ள வராகி அம்மனுக்கு மாதந்தோறும் பஞ்சமி நாளன்று சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம். வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, திருக்கோவில் அமைந்துள்ள வராஹியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது. வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் பூஜைகள் நடைபெற்றன. இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜை ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் மணிகண்ட பட்டர் செய்திருந்தார்.

இதேபோல, மதுரை தாசில்தா நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில், அம்மன் வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை பக்தர்கள் கண்டு தரிசித்து சென்றனர். கோவில் சார்பில் பக்தருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


வாடிப்பட்டியில் அறிவு திருக்கோயில் திறப்பு விழா!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி ஆர்.வி.நகரில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளை அறிவு திருக்கோயில் திறப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் தலை மை தாங்கி திறந்து வைத்தார். நிர்வாகிகள்
வி.ஏ.ஜெயசந்திரன், சீனியார் ரவி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற அறங்காவலர் மணவாளன் வரவேற்றார். இதில், ஏராளமான பொதுமக்கள் அறிவு திருக்கோயில் பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், செயலாளர் ஏ.பி.வெள்ளை நன்றி கூறினார்.


அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களில் 48 வது நாள் மண்டல பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவள்ளி அம்மன், முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் யாகபூஜைகளை தொடர்ந்து யாகசாலையில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட கோவில் கருவறையில் அமைந்துள்ள பாலமரத்தம்மன் மற்றும் முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 48 வது நாள் மண்டல பூஜை தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மரியாதைகாரர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா – பறவை காவடி எடுத்தும் பால்குடம் அக்னிச்சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் :

மதுரை, சோழவந்தான் அருகே, மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் சாற்றுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு கோவில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இன்று காலை ஆறு மணி அளவில் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றுக்கு சென்று அங்கிருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பக்தர் ஒருவர் உடல் முழுவதும் அழகு குத்தி பறவை காவடி எடுத்து நேர்த்திக்
கடன் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்மனுக்கு, பாலாபிஷேகம் நடைபெற்றது. மேல கால் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள்  செய்திருந்தனர்.

author avatar

Leave a Reply