682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
குடும்பநலன்,தேச நலன் காக்க கோபூஜை மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம்லலிதா சஹஸ்ரநாமம் கூட்டுப்பாராயணம் நடைபெற்றது.
நவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவை ஹை-டெக் தாமரை தோட்டத்தில் குடும்பநலன், தேச நலன் சிறந்திட, மேம்பட கோபூஜை, விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம், கூட்டுப் பாராயணம் நடைபெற்றது.
இந்நிகழ்வை துவக்கிவைத்து பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவில் வசிப்பதாக ஐதீகம். ஒரு நாட்டுமாடு இருந்தால் அந்த தோட்டத்து மண்ணிற்கு செயற்கை உரம் தேவையில்லை. மண்ணை வளப்படுத்துவதால் விவசாயிகள் அதை தெய்வமாக போற்றுகிறார்கள் என்றார்.
பழனி முருகன் அடிமை பாலசுப்ரமணியம் சுவாமி சிறப்புரையாற்ற, பாஜக., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.