ராஜா ரவிவர்மா ஒரு ராஜகுடும்ப ஓவியர் தன் வாழ்நாளில் ஸ்ரீ ஆதிசங்கர் உருவம் வரைய ஆர்வம் கொண்டிருந்தும் அவர்படைப்புக்களை படித்திருந்தும் அவர் உருவத்தை அவரால் உணரமுடியவில்லை இதனால் ஒருவித தவிப்பில் தளர்ந்த படி இருந்தார்..ரவிவர்மா..
ஒருநாள் உறங்கப்போகுமுன் ஆதிசங்கர பகவத்பாதாள் குறித்து ஆழ்ந்து கவலையுடன் சிந்தித்தவாறு அன்றிரவு கண்உறங்கினார்..
மறுநாள் விடியற்காலை நேரத்தில் அவருக்கு ஒரு காட்சி கனவு போல் உதித்தது..அதில் ஆதிசங்கரர் ஒருமரத்தடியில் அமர்ந்திருக்க அவரை சுற்றி சீடர்கள் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு உபதேசித்தபடி ஓர் காட்சியை தன் அனாகத சக்கரத்தில் நெஞ்சு பகுதியில் கண்டார்..
இந்த காட்சி விடியும் வரை ரவிவர்மா உள்ளத்தில் திரும்பத்திரும்ப உதிக்ககண்டார்..
அன்றைய தினமே தொடங்கி ஒரு மாதகாலத்துக்குள் இந்த அற்புத சித்திரத்தை வரைந்து முடித்தார்…
தான் உறக்கத்தில் கண்ட அதே முகம் சற்றும் பிறழாமல் தூரிகை சித்திரத்தில் பதிந்திருபபதைக்கண்டு மகிழ்ந்து இந்த சித்திரத்தை வணங்கிநின்றார்..
அந்த உன்னதக் கலைஞனால் தான் நாம் இன்று ஆதிசங்கர பகவத்பாதாள் உருவத்தை கண்முன் நிறுத்தி பூஜிக்க முடிகின்றது..
குருவின் கமல பாதத்தின் பக்தியில் உன் மனம் லயிக்காமல் போனால் செயல்புனைந்து புகழடைந்து பயன் என்ன. பயன் என்ன பயன் என்ன..என்று இந்த பாடல் சொல்கின்றது.. இதை எழுதியவர் சாக்ஷாத்..ஆதிசங்கரர் பகவத்பாதாள் தான்..