செங்கோட்டை சிவன் கோயிலில் ஆடிப்பூர வளையல் சாற்று விழா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா.
செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருககோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு உத்ஸவ நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
அதே போல இந்தாண்டிக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நாளான காலை 10 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 4.3 0 மணிக்கு அறம்வளா்த்தநாயகி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னா் அம்பாளுக்கு பல்லாயிரக்கணக்கான வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வண்ண மின்னொளியில் குலசேகரநாதசுவாமி ஜொலித்த வண்ணம் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த திருநாளில் திருமணமான பெண்கள் மாங்கல்யம் நிலைக்க வேண்டியும், அம்மன் வளையல் அணிந்து தாய்மை கோலம் பூண்டுள்ள நன்னாளில் பெண்கள் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருநாளை திருமணமான பெண்கள் விசேஷமாக வழிபட்டு வருகின்றனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் மேளதாளங்களுடன் எடுத்து வரப்பட்டது. 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வளைகாப்பு உத்ஸவ நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். முடிவில் அருள் பிரசாதத்துடன் பெண்களுக்கு சட்டை துணியுடன் வளையல்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மணடகபடிதாரர்கள் சாமில் உரிமையாளர் சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply