சென்னிவீரம்பாளையம் சித்திவிநாயகர் கோவில் மண்டலாபிஷேகம்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

சரண்

காரமடை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், கெண்டத்து மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 12 ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா முடிந்த பின்னர்  மண்டல பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.மண்டல பூஜையின் எட்டாவது நாளான இன்று  மாலை 6 மணிக்கு மேல் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு மேல் கெண்டத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. சிறப்பு  அலங்காரத்தில் மூலவர் கெண்டத்து மாரியம்மன் திருக்காட்சியளித்தார்.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக கெண்டத்து  மாரியம்மன் திருக்கோயில் திடலில் சென்னிவீரம்பாளையம் சித்தி விநாயகர் வள்ளிக் கும்மி  கலைக் குழுவினரின் வள்ளிக் கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply