682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் ரூ. 300 தரிசன டிக்கெட்களை அதிக எண்ணிக்கையில் வாங்கித் தருகிறோம் என்று சில இடைத்தரகர்கள் தங்கள் செல்போன் நம்பர்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ. 300 தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் வெப்சைட் மூலமும், மாநில அரசுகளுக்கு சொந்தமான ஒரு சில சுற்றுலா வளர்ச்சி கழகங்கள் மூலமும் மட்டுமே பக்தர்கள் பெற முடியும்.
ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம். சமூக வலைதளங்களில் வெளியாகும் இது போன்ற போலியான தகவல்களை பக்தர்கள் நம்ப கூடாது.