சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sabarimalai nadai open

உலகப்புகழ் பெற்ற சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாத சூழலில் கேரள அரசும் திருவாங்கூர் தேவஸம் போர்டும் இனி ஆன்லைன் புக்கிங் முறையில் மட்டும் தினசரி 80ஆயிரம் பக்தர்களை மட்டும் தினசரி அனுமதிக்கவும் ஸ்பாட் புக்கிங் முறையை ரத்து செய்து பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பதிவு மூலம் தரிசன முறையை திருமலை மாதிரி நடைமுறைப் படுத்த நினைக்கும் தேவஸம் போர்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருமலை போல் வசதிகளை செய்து தருவதில்லை.இதனால் மீண்டும் ஆன்லைன் முன் பதிவு முறையை கேரள அரசு காவல்துறையிடம் ஒப்படைத்து தினசரி சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.
சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

சபரிமலை மண்ட, மகர விளக்கு சீசனில் கடந்த ஆண்டு போல நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக, ‘ஸ்பாட் புக்கிங்’ ரத்து செய்யப்படுகிறது. தினம், 80,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்க கேரள அரசும், தேவசம் போர்டும் முடிவு செய்துள்ளன.

கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு, 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காடுகளிலும், மலைகளிலும் சிக்கிய பக்தர்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் முடிக்காமல் இருமுடி கட்டுகளை காட்டுகளுக்குள்ளே விட்டு திரும்பினர்.

சபரிமலையில், 14 ஆண்டுகளுக்கு முன், ‘விருச்சுவல் கியூ’ என்ற ஆன்லைன் முன்பதிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துவக்கப்பட்டது. கொரோனாவுக்கு பின் முழுமையாக அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக நிலக்கல், பம்பை, எருமேலி மற்றும் கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டது. ஏற்கனவே, 80,000 பக்தர்கள் முன்பதிவு வாயிலாக தினமும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்பாட் புக்கிங் வாயிலாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் பெரும் சிக்கலானது.

தொடர்ந்து, நவம்பர் மாதம் துவங்க உள்ள மண்டல, மகர விளக்கு கால சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை முழுமையாக ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் முடிவு செய்துள்ளன.

தினசரி முன்பதிவு, 80,000 ஆக தொடரவும், சீசனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் முன்பதிவை துவங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பிரசாந்த் கூறினார்.

இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவு எதற்கு கேரளாவில் தரிசனம் செய்ய வர அனைத்து பக்தர்களும் அனைத்து கோவில்களிலும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதா சட்டம் ஏதாவது உள்ளதா என ஐயப்பா சேவை சங்கங்கள் மற்றும் பக்தர்கள் கேள்வி கேட்கின்றனர்.

திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு இதே நடைமுறையை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு கண்ட்ரோலில் உள்ள அனைத்து கோவிலிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்று எந்த நடைமுறையும் இல்லை

பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத தேவஸ்தானம் உண்டியல் வருமானத்தை மட்டும் எப்படி கணக்கெடுக்கிறார்கள்.என பக்தர்கள் புகார் கூறுகின்றனர்

சபரிமலை நிர்வாகத்தை வேறு ஒரு தேவஸ்தானத்திடம் திருவாங்கூர் தேவஸ்தானம் ஒப்படைக்க வேண்டும்
எங்களால் சபரிமலை நிர்வாகத்தை நிர்வாக படுத்த முடியவில்லை என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்

குருவாயூரில் தினமும் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள் அங்கு எந்த ஒரு பிரச்சனையும் நடைபெறவில்லை..சோட்டானிக்கரை தினமும் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

60 நாட்கள் இவர்களால் சமாளிக்க முடியாததால் திருவாங்கூர் தேவஸம் போர்டு தற்போதைய நிர்வாகக்குழு நிர்வாகத்தை விட்டு விலக வேண்டும்

இதற்கு முன்பு பல வருடங்களுக்கு முன்பெல்லாம் இதைவிட அதிகமான கூட்டம் எல்லாம் இருந்த போதும் எந்த ஒரு பிரச்சினையும் நடைபெறவில்லை தற்போது தான் இந்த பிரச்சனை இந்த ஆண்டுதான் அதிகப்படியான பிரச்சனை தொடங்கியுள்ளது.

இதற்கு முழு காரணம் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தோல்வியே அவர்கள் நிர்வாகத்தை விட்டு விலகி வேறு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் முடியாது என்று சொல்பவர்களிடம் நிர்வாகம் எதற்கு.என்று உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் கூறுகின்றனர்.

ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாத சூழலில் கேரள அரசும் திருவாங்கூர் தேவஸம் போர்டும் இனி ஆன்லைன் புக்கிங் முறையில் மட்டும் தினசரி 80ஆயிரம் பக்தர்களை மட்டும் தினசரி அனுமதிக்கவும் ஸ்பாட் புக்கிங் முறையை ரத்து செய்து பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பதிவு மூலம் தரிசன முறையை திருமலை மாதிரி நடைமுறைப் படுத்த நினைக்கும் தேவஸம் போர்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருமலை போல் வசதிகளை செய்து தருவதில்லை.

இதனால் மீண்டும் ஆன்லைன் முன் பதிவு முறையை கேரள அரசு காவல்துறையிடம் ஒப்படைத்து தினசரி சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.

Leave a Reply